இயேசுவின் தூய இரத்தம் சிந்தப்பட்ட 7 நிகழ்வுகள்
2. இயேசு கெத்சமனியில் இரத்த வியர்வை வியர்த்தல்
3. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு கசையால் அடிக்கப்படுதல்
4. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்படுதல்
5. இயேசு கல்வாரிக்கு சிலுவை சுமந்து செல்லுதல்
6. இயேசு சிலுவையில் அறையப்படுதல்
7. இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தித் திறத்தல்
ஏழு முறை சிந்தப்பட்ட இயேசுவின் தூய இரத்தத்திடம்
ஏழு தலையான பாவங்களுக்கு எதிராக எழுப்பப்படும் வேண்டல்கள்
1. மிகவும் தாழ்ச்சியுள்ள எங்கள் ஆண்டவரும், குருவுமான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே, நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் உம்முடைய குழந்தைப் பருவத்தில், உம்முடைய மனித வாழ்க்கையின் எட்டாம் நாளில், ஆபிரகாமின் உண்மையான மகனாக விருத்தசேதனத்தின் வேதனையைத் தாங்கி, உம்முடைய விலைமதிப்பில்லாத, மாசற்ற இரத்தத்தை நீர் சிந்தினீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பெருமைக்கும், உலக மாயைக்கும் எதிரான மனத்தாழ்மை என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.
(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)
ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.
2. தன் சேயின் மீது பெலிக்கன் பறவை கொண்டிருக்கும் அன்பைப் போன்ற அன்பு கொண்ட இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் கெத்சமனி தோட்டத்தில், உம் இதயத்தின் வேதனையிலிருந்து, இரத்த வியர்வை சிந்தினீரே, மேலும், உம்மை முழுவதுமாக மரணத்திற்கு கையளித்து, அதை உம்முடைய தந்தைக்கு நீர் ஒப்புக்கொடுத்தீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பேராசைக்கும் அவலத்திற்கும் எதிரான தாராளகுணம் என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.
(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)
ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.
3. மிகவும் தூய்மையான வாழ்க்கைத் துணையாகிய இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் பிலாத்துவின் தீர்ப்பு மன்றத்தில் இரக்கமின்றி பிணைக்கப்படுவதற்கும், உமது கற்புடைய உடலை கற்றூணில் கட்டி, கசையால் அடிக்கப்பட்டு கொடூரமாகத் துன்புறுத்தப்படுவதற்கு நீர் ஒப்புக்கொடுத்தீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா சிற்றின்பத்திற்கும் காமவெறிக்கும் எதிரான கற்பு என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.
(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)
ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.
4. மிகவும் பொறுமையுள்ள ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் உம்முடைய புனிதமான தலையிலே துளையிடும் முட்களால் முடிசூட்டப்பட்டும், நாணல் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டும் நீர் அளவில்லாத துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா கோபத்திற்கும் பழிவாங்கும் விருப்பத்திற்கும் எதிரான பொறுமை என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.
(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)
ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.
5. நிதானம் மற்றும் சுய மறுப்பின் முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் நீர் உம்முடைய சிலுவையைச் சுமப்பதற்கு முன்னும் பின்னும் உமது ஆடைகள் கிழிக்கப்படவும், அவை உம் உடலின் காயங்களை மீண்டும் திறந்து, புதிதாக இரத்தம் வரச் செய்யவும் நீர் துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பேராசை மற்றும் பெருந்தீனிக்கு எதிரான ஒறுத்தல் மற்றும் சுய மறுப்பு என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.
(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)
ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.
6. நேர்மையான நல்ல சமாரியனாகிய இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் எங்கள் மீது பற்றி எரியும் உம் அன்பினால், எங்கள் மீட்பிற்காக உமது புனிதமான கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைக்கப்பட்டு சிலுவையில் அறைய நீர் துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பொறாமைக்கும் காழ்ப்புணர்வுக்கும் எதிரான சகோதர அன்பு என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.
(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)
ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.
7. மிகவும் தெய்வீக சுறுசுறுப்புள்ள தலைமை குருவான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.
ஏனென்றால் உம்முடைய புனித விலாவினைத் ஈட்டியால் குத்தித் திறந்து, காயப்படுத்த நீர் துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, உம்முடைய பணியிலும், ஒவ்வொரு சமயப் பயிற்சியிலும் வரும் அனைத்து சோம்பல்களுக்கும் சோர்வுக்கும் எதிரான தெய்வீக சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம் என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.