Showing posts with label செபமாலை. Show all posts
Showing posts with label செபமாலை. Show all posts

Saturday, 26 September 2020

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

( புதிய மற்றும் திருத்திய தமிழ் மொழிபெயர்ப்பு)


ஆண்டவரே இரக்கமாயிரும் (2)

கிறிஸ்துவே இரக்கமாயிரும் (2)

ஆண்டவரே இரக்கமாயிரும் (2)


கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும்.


விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா, 

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய ஆவியாராகிய இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய்மைமிகு மூவொரு இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.


புனித மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியருள் புனித கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்துவின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு அவையின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரக்கத்தின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறையருளின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எதிர்நோக்கின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூய்மைமிகு அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிமை குன்றா அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாசு இல்லாத அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவக் கறையில்லா அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அன்புக்குரிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியப்புக்குரிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நல்ல ஆலோசனை அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

படைத்தவரின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மீட்பரின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பேரறிவுமிகு கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வணக்கத்திற்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போற்றுதற்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வல்லமையுள்ள கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிவுள்ள கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம்பிக்கைக்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீதியின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானத்திற்கு உறைவிடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் மகிழ்ச்சியின் காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானம் நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாட்சிக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தி நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைபொருளின் ரோசா மலரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீது அரசரின் கோபுரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தந்த மயமான கோபுரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன் மயமான கோவிலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உடன்படிக்கையின் பேழையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணகத்தின் வாயிலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விடியற்கால விண்மீனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நோயுற்றோரின் ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துயருறுவோருக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்தவர்களுடைய துணையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வானதூதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதுபெரும் தந்தையரின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவாக்கினர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருத்தூதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைசாட்சிகளின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறையடியார்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனைத்துப் புனிதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமல உற்பவியான அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணேற்பு அடைந்த அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்செபமாலையின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குடும்பங்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமைதியின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்திய நாட்டின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.


இறைவனின் புனித அன்னையே! இதோ உம் அடைக்கலம் நாடி வந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும். 

முதல்வர்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி

அனைவரும்: இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மன்றாடுவோமாக!

இறைவா முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 


--------------

நன்றி: நம் வாழ்வு வார இதழ்


Wednesday, 23 September 2020

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித மரியன்னை மன்றாட்டுமாலையில் புதிதாக சேர்க்கப்பட்ட புகழுரைகள்




2020 ஜுன் 20 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருவழிபாட்டு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் வழியாக புனித மரியன்னையின் மன்றாட்டுமாலையில் இரக்கத்தின் அன்னையே, எதிர்நோக்கின் அன்னையே மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே ஆகிய மூன்று புதிய வேண்டல்களைச் சேர்த்துக்கொள்ளும்படி சுற்றறிக்கை விடுத்துள்ளார்கள். 


இரக்கத்தின் அன்னையே என்பதை திரு அவையின் அன்னையே என்பதற்குப் பின்பும், எதிர்நோக்கின் அன்னையே என்பதை இறையருளின் அன்னையே என்பதற்குப் பின்பும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே என்பதை பாவிகளுக்கு அடைக்கலமே என்பதற்குப் பின்பும் சேர்த்து மன்றாட திருவழிபாட்டு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் பணித்துள்ளது. 


Wednesday, 12 August 2020

அருள் நிறைந்த மரியே மன்றாட்டு

 அருள் நிறைந்த மரியே மன்றாட்டு



திரு அவையின் தொன்மைச் சிறப்புமிக்க பாரம்பரியமான செபங்களுள் அருள் நிறைந்த மரியே வாழ்க எனும் மன்றாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மரியன்னையின் பரிந்துரையை நாடி வேண்டுவதாக அமைந்துள்ளது. 

பயன்பாடு

இச்செபத்தை செபமாலை செபிக்கும் போதும், மூவேளை மன்றாட்டை செபிக்கும் போதும் பயன்படுத்துகிறோம். இது மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட செபம் ஆகும். 

விவிலிய அடிப்படையும் விளக்கமும்

மங்கள வார்த்தை மன்றாட்டு முழுக்க முழுக்க விவிலிய அடிப்படை கொண்டதாகும். 

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே’ -  லூக்கா 1:28

மரியா இறைவனின் அருளால் நிறைந்தவள் என்றும், ஆண்டவர் மரியாவோடு உடன் இருக்கிறார் என்றும் வானதூதர் கபிரியேல் கன்னி மரியாவைப் பார்த்து வாழ்த்துகிறார். இவ்வாழ்த்து தந்தையாம் கடவுளால் அவருடைய தூதரான கபிரியேலின் வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்க வந்தபோது கபிரியேல் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார். நாமும் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கும்போது, தந்தையாம் இறைவன் கபரியேல் வழியாக சொல்லியனுப்பிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவைப் பெற்றெடுக்க இசைவு தெரிவித்த அன்னைக்கு வணக்கம் செலுத்துகிறோம்.  

‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே’ – லூக்கா 1:42

இவ்வார்த்தைகள் கருவுற்றிருந்த எலிசபெத் மரியாவிடம் சொல்லியவை. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவுக்கு தனது வாழத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தாள். இஸ்ரயேல் இனத்துப் பெண்களில் பலர் மெசியாவின் தாயாக மாற ஏக்கம் கொண்டிருந்தாலும், மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட எலிசபெத், கடவுளின் மகனையே கருவில் சுமக்கப்போகும் மரியா பெண்கள் அனைவரிலும் ஆசி பெற்றவள் என்று பாராட்டுகிறாள். மேலும் மரியாவின் வயிற்றில் பிறக்கப்போகும் இயேசுவும் ஆசி பெற்றவர் என்று பாராட்டுகிறாள்.  

‘புனித மரியே, இறைவனின் தாயே’ - லூக்கா 1:43

இந்த வார்த்தைகளும் மரியாவிடம் எலிசபெத் சொன்னவையே. மரியா புனிதமானவள் என்பதையும், அவள் மனிதரின் தாயல்ல. இறைவனின் தாய் என்பதையும் பறைசாற்றுகின்ற வார்த்தைகள் இவை. 

‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’. -  யாக்கோபு 5:16

இச்செபத்தின் இறுதிப் பகுதியிலுள்ள இவ்வார்த்தைகள் நம்முடைய மன்றாட்டாக அமைந்துள்ளன. பரிந்துரை மன்றாட்டு என்பது கத்தோலிக்க திரு அவையில் முக்கியமான ஒன்று. இறைவனின் அன்னையாகிய மரியா அன்று கானாவில் நடைபெற்ற திருமணத்தில் திருமண வீட்டாராருக்காக இயேசுவிடம் பரிந்து பேசியதுபோல, இன்று நமக்காகவும் இறைவனிடம் பரிந்துபேசுவார் என்கிற நம்பிக்கையோடு நாம் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கிறோம். குறிப்பாக நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இப்பொழுது நமக்கான தேவைகளைக் குறித்தும், இறப்பின் வேளையில் நமக்குத் துணையாக இறைத்தாய் இருக்கும்படியாகவும் நாம் இறைஞ்சி செபிக்கிறோம். 



மூன்று பகுதிகள் தொகுக்கப்பட்ட வரலாறு

இச்செபத்தின் முதல் பகுதியில் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவை வாழ்த்துவதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:28). இந்த வார்த்தைகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழிபாட்டு முறைகளில் காணப்பட்டன. 

இரண்டாவது பகுதியில் புனித திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத் மரியாவைப் புகழ்வதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:42). இந்த இரண்டு பகுதிகளும் கி.பி. 1000 க்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்து வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏறக்குறைய திருத்தந்தை நான்காம் உர்பன் காலத்தில் (கி.பி. 1261-64) இந்த இணைப்பில் இயேசு என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டது. 

மூன்றாவது பகுதியில் நாம் செபிக்கும் விண்ணப்பம் என்பது சுமார் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வழக்கதிற்கு வந்து பல பரிமாணங்களைப் பெற்றிருக்க வேண்டும். 

இறுதியாக கி.பி. 1568 ஆம் ஆண்டில் திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் திருப்புகழ்மாலையை சீர்திருத்திய போது இந்த செபத்தின் இப்போது நாம் பயன்படுத்தும் முழுமை வடிவம் உருவானது. 


Wednesday, 13 May 2020

அன்னையை அறிவோம் - 13


அன்னையை அறிவோம் - 13




1.         பாத்திமா நகரில் மரியன்னையின் திருக்காட்சிகள் எப்போது தொடங்கி எப்போது வரை நிகழ்ந்தன13 மே 1917 முதல் 13 அக்டோபர் 1917 வரை.

2.         பாத்திமா நகரில் மரியன்னையின் திருக்காட்சியை அங்கீகரித்த திருத்தந்தை யார்திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர்.

3.         பாத்திமா நகர் திருக்காட்சிகள் எந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டன1930.

4.         அன்னையின் இரக்கத்தின் ஆடை என்று அழைக்கப்படுவது யாதுஉத்திரியம்.

5.         என் இயேசுவேஎன்கிற செபம் மரியன்னையின் எந்த காட்சியில், யாருக்கு வழங்கப்பட்டது1917 ஆம் ஆண்டில் பாத்திமா காட்சியில் லூசியாவிற்கு வழங்கப்பட்டது.

6.         2002 முதல் 2003 வரையிலான ஆண்டு திரு அவையால் எந்த ஆண்டாகச் சிறப்பிக்கப்பட்டதுசெபமாலை ஆண்டு.

7.         அக்டோபர் மாதத்தை செபமாலை மாதமாக அறிவித்த திருத்தந்தை யார்திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர்.

8.         எந்த ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் செபமாலை மாதமாக நினைவுகூறப்படுகிறது1883 ஆம் ஆண்டிலிருந்து.

9.         செபமாலை பக்தி முயற்சியைக் குறித்து திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் வெளியிட்ட சுற்று மடல் பெயர் என்னஉயர்ந்த திருத்தூதுப் பணி.

10.       கன்னி மாமரியின் பாமாலை என்கிற சுற்றுமடலை வெளியிட்ட திருத்தந்தை யார்திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் (ஜான் பால்).


Wednesday, 6 May 2020

அன்னையை அறிவோம் - 6


அன்னையை அறிவோம் - 6




1. செபமாலையில் தியானிக்கப்படும் மறையுண்மைகள் மொத்தம் எத்தனை20

2. செபமாலையின் மகிழ்ச்சியின் மறையுண்மைகள் யாவை?
கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்கு மங்கள வார்த்தை கூறியது
கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தது
இயேசு பிறந்தது
இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது
காணாமல்போன இயேசுவை ஆலயத்தில் கண்டடைந்தது

3.  செபமாலையின் ஒளியின் மறையுண்மைகள் யாவை?
இயேசுவின் திருமுழுக்கு
கானாவில் இயேசுவின் முதல் புதுமை
இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு
இயேசுவின் உருமாற்றம்
இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது

4. செபமாலையின் துயர்நிறை மறையுண்மைகள் யாவை?
இயேசு இரத்த வியர்வை சிந்தியது
இயேசு கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டது
இயேசுவுக்கு முள்முடி சூட்டியது
இயேசு சிலுவை சுமந்து சென்றது
இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டது

5. செபமாலையின் மகிமைநிறை மறையுண்மைகள் யாவை?
இயேசு உயிர்த்தது
இயேசு விண்ணேற்றம் அடைந்தது
தூய ஆவியாரின் வருகை 
மரியாவின் விண்ணேற்பு
மரியா மண்ணக, விண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டது

6. செபமாலையின் ஒளியின் மறையுண்மைகளை எந்த திருத்தந்தை எப்போது பிரகடனப்படுத்தினார்திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், 2002 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி செபமாலை அன்னை திருவிழாவன்று.

7. செபமாலையை நம்பிக்கையாளரின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்திருத்தந்தை 13 ஆம் லியோ (சிங்கராயர்)

8. திருத்தந்தை 13 ஆம் லியோ (சிங்கராயர்) செபமாலையைப் பற்றி எத்தனை சுற்று மடல்கள் எழுதியுள்ளார்12 சுற்று மடல்கள்

9. வேத போதக செபமாலையை தோற்றுவித்தவர் யார்பேராயர் ஃபுல்டன்  ஷீன்.

10. வேத போதக செபமாலையின் நிறங்களும் அதன் கண்டங்களும் யாவைஆப்பிரிக்கா-பச்சை, ஆஸ்திரேலியா-நீலம், ஐரோப்பா-வெள்ளை, ஆசியா-மஞ்சள், அமெரிக்கா-சிவப்பு.