Showing posts with label திருத்தந்தையின் மோதிரம். Show all posts
Showing posts with label திருத்தந்தையின் மோதிரம். Show all posts

Wednesday, 15 July 2020

திருத்தந்தையின் மோதிரம்


திருத்தந்தையின் மோதிரம்




ஒவ்வொரு திருத்தந்தையினுடைய வலது கையின் மோதிர விரலிலும்மீனவரின் மோதிரம்என்று அழைக்கப்படும் திருத்தந்தையின் மோதிரம் அணியப்படுகிறது.




இதில் ஒரு படகில் இருந்து புனித பேதுரு மீன்பிடித்தலைக் காட்டக் கூடிய சின்னம் காணப்படுகிறது. இது திருத்தூதர்கள்மனிதர்களைப் பிடிப்பவர்கள்’ (மாற்கு 1:17) என்ற விவிலிய மரபிலிருந்து பெறப்பட்ட ஒரு குறியீடாகும். மேலும் இதைச் சுற்றிய வண்ணம் திருத்தந்தையின் பெயரானது இலத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இது ஆயருக்கும் அவரது மறைமாவட்டத்துக்கும் இடையிலான திருமணத்திற்கு ஈடான உறவு ஒன்றிப்பைக் குறிக்கிறது. இது தெய்வீகமாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட ஓர் ஏற்பாடாக புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த மோதிரம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து தனியார் கடிதங்களுக்கான முத்திரையாகவும் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு முதல் திருத்தந்தையின் சுருக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.





இது ஒரு திருத்தந்தையின் அதிகாரத்தின் மிக சக்தி வாய்ந்த அடையாளமாக இருக்கக்கூடும். ஒரு திருத்தந்தை இறந்தவுடன், ‘கேமர்லெங்கோஎன்றழைக்கப்படும் திருத்தந்தையின் மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்கும் கர்தினாலால் அவருடைய மோதிரம் ஏனைய கர்தினால்களின் முன்பாக சுத்தியல் கொண்டு உடைக்கப்படுகிறது. இது அத்திருத்தந்தையின் ஆட்சியின் முடிவைக் காட்டுகிறது