அன்னையை அறிவோம் - 12
1. மரியாவைப் பற்றிய நெஸ்தோரியுசின் தப்பறைக் கொள்கை யாது? ‘மரியா இறைவனின் தாய் அல்ல. மாறாக மனிதராகிய இயேசுவின் தாய் மட்டுமே’.
3. நெஸ்தோரியுசின் தப்பறைக் கொள்கையை மிகவும் வன்மையாக கண்டித்தவர்களுள் முக்கியமானவர் யார்? அலெக்சாந்திரியா நகர ஆயர் புனித சிரில்.
4. மரியா முப்பொழுதும் கன்னி என்றால் என்ன? மரியா இயேசுவைப் பெற்றெடுக்கும் முன்பும், இயேசுவைப் பெற்றெடுக்கும் போதும், இயேசுவைப் பெற்றெடுத்த பின்பும் கன்னியாகவே இருந்தார் என்பதையே மரியா முப்பொழுதும் கன்னி என்கிறோம்.
5. மரியாவின் கன்னிமையை மோசேயின் எரியும் முட்புதருக்கு ஒப்பிட்டு கூறியவர் யார்? நீசா நகர் கிரகோரி.
6. மரியாவின் அமல உற்பவத்தை பிரான்சிஸ்கன் துறவி ஜான் டன்ஸ் ஸ்காட்டஸ் எவ்வாறு விளக்குகிறார்? மரியா உட்பட மனிதர் அனைவருக்கும் இயேசுவின் மீட்பு தேவை. இயேசுவின் இல்லிடமாக மாற வேண்டியிருந்த மரியாவை இயேசு தம் மீட்பின் பலனை முன்னிட்டு பிறப்பு நிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்தார். கடவுள் காலங்களைக் கடந்தவர். இறந்த காலமும் அவருக்கு நிகழ் காலமே. எனவே காலத்தால் பின்வரும் நிகழ்ச்சியின் பலனை (பாஸ்கா மறைபொருளின் பலனை) முன்வரும் நிகழ்ச்சிக்கு (அமல உற்பவத்திற்கு) உரியதாக்க அவரால் இயன்றது.
7. இயேசுவால் மீட்கப்பட்டோரில் முதல் ஆள் மரியா என்பதனை தெளிவுபடுத்தும் மரியன்னைக் கோட்பாடு எது? மரியாவின் அமல உற்பவம்.
8. லூர்து நகரில் மரியன்னையின் திருக்காட்சிகள் எப்போது தொடங்கி எப்போது வரை நிகழ்ந்தன? 11 பிப்ரவரி 1858 முதல் 16 ஜீலை 1858 வரை.
9. லூர்து நகர் திருக்காட்சிகளை அங்கீகரித்த திருத்தந்தை யார்? திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்.
10. லூர்து நகர் திருக்காட்சிகள் எந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டன? 1862.