Showing posts with label புனித பாத்திமா அன்னை. Show all posts
Showing posts with label புனித பாத்திமா அன்னை. Show all posts

Monday, 18 May 2020

அன்னையை அறிவோம் - 18



அன்னையை அறிவோம் - 18





1. பாத்திமா காட்சியைப் பெற்ற மூன்று குழந்தைகளின் பெயர்கள் என்னலூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ.

2. பாத்திமாவில் மரியன்னை காட்சியளிப்பதற்கு முன்பு அச்சிறார்களுக்கு யார் காட்சியளித்தது? எத்தனை முறை அக்காட்சிகள் நிகழ்ந்தனமூன்று முறை வானதூதரின் காட்சிகள்

3. பாத்திமாவில் குழந்தைகள் எங்கு ஆடு மேய்க்கும் போது தேவ அன்னையின் காட்சி பெற்றார்கள்கோவா டா இரியா.

4. பாத்திமாவில் நடைபெற்ற எல்லா காட்சிகளிலும் மரியன்னையிடம் பேசியது யார்லூசியா மட்டும்.

5. பாத்திமாவில் நடைபெற்ற எல்லா காட்சிகளிலும் மரியன்னை தினமும் எதைச் சொல்ல வேண்டுமென்று குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார்தினமும் செபமாலை சொல்லக் கேட்டுக்கொண்டார்

6. பாத்திமாவில் அன்னையின் திருக்காட்சிகள் என்று தொடங்கி எப்பொது வரை நிகழ்ந்தன1917 மே 13 தொடங்கி 1917 அக்டோபர் 13 வரை.

7. பாத்திமா அன்னை கடவுளின் பேரருள் கிடைக்க முதல் சனிக்கிழமைகளில் என்ன செய்யும்படி லூசியாவிடம் கேட்டுக்கொண்டார்பாவ மன்னிப்பு பெற்று, நற்கருணை பெற்று, செபமாலை ஒப்புக்கொடுத்தால் கடவுளின் பேரருள் கிடைக்கும்

8. பாத்திமா அன்னையின் காட்சி பெற்று பின்னர் அருள்சகோதரியாக மாறிய லூசியா எப்போது இறந்தார்2005 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி

9. பாத்திமா அன்னையின் காட்சியோடு தொடர்புடைய இரகசியங்கள் மொத்தம் எத்தனைமூன்று

10. தன் மீது சுடப்பட்ட ஒரு துப்பாக்கி குண்டை திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் எங்கு காணிக்கையாக்கினார்? இப்போது அது எங்கு வைக்கப்பட்டுள்ளதுபோர்ச்சுக்கலிலுள்ள புனித பாத்திமா அன்னை திருத்தலத்திற்கு காணிக்கையாக்கினார். இப்போது அது பாத்திமா அன்னையின் மணிமுடியில் வைக்கப்பட்டுள்ளது.






Wednesday, 13 May 2020

பாத்திமா அன்னை



பாத்திமாவில் இறை அன்னையின் திருக்காட்சி 


 

முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில் பாத்திமா அன்னையின் காட்சி நடைபெற்றது. 1917 மே 13 ஆம் நாள் போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள பாத்திமா என்ற கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த கோவாடா இரியா என்ற இடத்தில் லூசியா, பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா என்ற மூன்று சிறார்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வானத்திலிருந்து வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து அவர்கள் முன்பாக இருந்த ஒரு மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினார்

அவர் அச்சிறார்களிடம், ‘ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி நீங்கள் இங்கு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் தவறாமல் செபமாலை சொல்ல வேண்டும். ரஷ்யா மனம் மாற செபிக்க வேண்டும்என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். அவர்கள் இக்காட்சியைக் குறித்து தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. ஆனால் அவர்களோ காட்சியில் வந்த பெண்மணி தங்களுக்குச் சொன்னவாறு தினமும் செபமாலை செபித்து, மக்களுடைய மனமாற்றத்திற்காக செபித்தார்கள்

ஜீலை 13 ஆம் தேதி அவர்கள் மீண்டும் அவ்விடத்திற்குச் சென்றார்கள். அப்பெண் மீண்டும் அவர்களுக்கு காட்சியளித்தார். அவர் அவர்களிடம் நரகத்தின் வேதனை மிகுந்த காட்சியை காட்டினார். பின்பு அவர், ‘ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். அனைத்து ஆன்மாக்களையும் விண்ணகப்பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்.’ என்ற செபத்தை கொடுத்து செபிக்கச் சொன்னார்கள். இந்த முறையும் அவர்கள் கண்ட காட்சியைக் குறித்து மக்களிடம் சொன்ன போது யாரும் நம்பவில்லை. தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதனால் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அங்கு செல்ல முடியவில்லை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அங்கு சென்றபோது மீண்டும் அப்பெண்மணி அவர்களுக்கு காட்சியளித்து, ‘மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து விடுபட வேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்என்று சொல்லி மறைந்தார். இதன் பின் இம்மூவரும் இக்காட்சியைக் குறித்து சொன்னபோது மக்கள் படிப்படியாக நம்பத் தொடங்கினர். 1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் அவ்விடத்தில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தனர். அப்போது ஒளிவண்ணமாய் மரியா காட்சி தந்து, ‘நானே செபமாலை அன்னை. நீங்கள் அனைவரும் ரஷ்யாவை எனது மாசற்ற இதயத்துக்கு ஒப்புக்கொடுத்து செபிக்க வேண்டும்என்று சொல்லிவிட்டு மறைந்தார். இக்காட்சியின் போது நல்ல மழை பெய்தது. ஆனால் அம்மூன்று சிறார்கள் இருந்த இடம் மட்டும் நனையவில்லை

அதற்குப் பிறகு மரியன்னை அவர்களுக்கு வேறு பல காட்சிகளையும் அளித்தார். அக்காட்சிகளில் பிரான்சிஸ்கோவும், ஜெசிந்தாவும் விரைவிலேயே விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படபோவதாகவும், லூசியா மட்டுமே மண்ணகத்தில் உயிர் வாழப்போவதாகவும் சொல்லப்பட்டது. அதன்படியே லூசியா தவிர மற்ற இருவரும் இறந்துபோனார்கள்

மரியா சொல்லியபடியே மக்கள் தீயவழியில் சென்றதால் இரண்டாம் உலகப்போரும் வந்தது. 1952 ஆம் ஆண்டு ஜீலை 7 ஆம் தேதி ரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது

காட்சி அளித்த இடம்  : பாத்திமா நகர், போர்ச்சுக்கல்
காட்சி அளித்த நாள்  : 13 மே 1917 முதல் 13 அக்டோபர் 1917 வரை
காட்சியைப் பெற்றவர் : லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ
காட்சியை அங்கீகரித்தவர் : திருத்தந்தை 11ஆம் பத்திநாதர்
அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு : 1930