Monday, 18 May 2020

அன்னையை அறிவோம் - 18



அன்னையை அறிவோம் - 18





1. பாத்திமா காட்சியைப் பெற்ற மூன்று குழந்தைகளின் பெயர்கள் என்னலூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ.

2. பாத்திமாவில் மரியன்னை காட்சியளிப்பதற்கு முன்பு அச்சிறார்களுக்கு யார் காட்சியளித்தது? எத்தனை முறை அக்காட்சிகள் நிகழ்ந்தனமூன்று முறை வானதூதரின் காட்சிகள்

3. பாத்திமாவில் குழந்தைகள் எங்கு ஆடு மேய்க்கும் போது தேவ அன்னையின் காட்சி பெற்றார்கள்கோவா டா இரியா.

4. பாத்திமாவில் நடைபெற்ற எல்லா காட்சிகளிலும் மரியன்னையிடம் பேசியது யார்லூசியா மட்டும்.

5. பாத்திமாவில் நடைபெற்ற எல்லா காட்சிகளிலும் மரியன்னை தினமும் எதைச் சொல்ல வேண்டுமென்று குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார்தினமும் செபமாலை சொல்லக் கேட்டுக்கொண்டார்

6. பாத்திமாவில் அன்னையின் திருக்காட்சிகள் என்று தொடங்கி எப்பொது வரை நிகழ்ந்தன1917 மே 13 தொடங்கி 1917 அக்டோபர் 13 வரை.

7. பாத்திமா அன்னை கடவுளின் பேரருள் கிடைக்க முதல் சனிக்கிழமைகளில் என்ன செய்யும்படி லூசியாவிடம் கேட்டுக்கொண்டார்பாவ மன்னிப்பு பெற்று, நற்கருணை பெற்று, செபமாலை ஒப்புக்கொடுத்தால் கடவுளின் பேரருள் கிடைக்கும்

8. பாத்திமா அன்னையின் காட்சி பெற்று பின்னர் அருள்சகோதரியாக மாறிய லூசியா எப்போது இறந்தார்2005 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி

9. பாத்திமா அன்னையின் காட்சியோடு தொடர்புடைய இரகசியங்கள் மொத்தம் எத்தனைமூன்று

10. தன் மீது சுடப்பட்ட ஒரு துப்பாக்கி குண்டை திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் எங்கு காணிக்கையாக்கினார்? இப்போது அது எங்கு வைக்கப்பட்டுள்ளதுபோர்ச்சுக்கலிலுள்ள புனித பாத்திமா அன்னை திருத்தலத்திற்கு காணிக்கையாக்கினார். இப்போது அது பாத்திமா அன்னையின் மணிமுடியில் வைக்கப்பட்டுள்ளது.