Tuesday, 19 May 2020

அன்னையை அறிவோம் - 19


அன்னையை அறிவோம் - 19



  
1. மரியன்னை லூர்து நகரில் யாருக்குக் காட்சியளித்தார்பெர்னதெத் சூபிருஸ் என்ற சிறுமிக்கு.

2. லூர்து நகரில் மரியா எத்தனை முறை காட்சி கொடுத்தார்18 முறை.

3. புனித லூர்து அன்னையின் காட்சி பெற்றபோது புனித  பெர்னதெத்துக்கு வயது என்ன14.

4. புனித பெர்னதெத் எந்த குகையில் மரியாவின் காட்சியைப் பெற்றார்மாசபியேல்

5. புனித லூர்து அன்னையின் காட்சி பெற்ற புனித பெர்னதெத்துக்கு வந்த நோய்கள் எவைகாலரா, ஆஸ்துமா, நிமோனியா மற்றும் எலும்புருக்கி நோய்.

6. புனித லூர்து அன்னையின் திருவிழாவாகிய பிப்ரவரி 11 ஆம் தேதியை திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் எந்த நாளாக கொண்டாடும்படி அறிவித்தார்உலக நோயுற்றோர் தினம்

7. லூர்து நகருக்கு மூன்று முறை திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை யார்திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்.

8. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தன்னுடைய பணி விலகலை அறிவித்த நாள் எது2013 பிப்ரவரி 11 ஆம் தேதி புனித லூர்து அன்னை திருவிழா அன்று

9. மருத்துவ மாணவராக லூர்து நகருக்கு சென்று அன்னையின் அற்புதங்களைப் பார்த்துவிட்டு அங்கே தன்னுடைய இறையழைத்தலைப் பெற்றுக்கொண்ட இயேசு சபைத் துறவி யார்அருள்பணியாளர். பேதுரு அருப்பே, முன்னாள் இயேசு சபைத் தலைவர்.

10. ‘பெர்னதெத்தின் பாடல்என்ற நாவலை எழுதியவர் யார்பிரான்ஸ் வெர்பெல்