Wednesday, 20 May 2020

அன்னையை அறிவோம் - 20


அன்னையை அறிவோம் - 20




1. லா சலேத்தில் அன்னை எப்போது காட்சியளித்தார்1846 செப்டம்பர் 19.

2. லா சலேத் என்கிற ஊர் எந்த நாட்டில் உள்ளதுபிரான்ஸ்.

3. லா சலேத்தில் அன்னையின் காட்சி பெற்ற குழந்தைகளின் பெயர்கள் என்னமெலானி கால்வத் மேத்யூ என்ற 14 வயது சிறுமிக்கும். மேக்சிமின் ஜெராட் என்ற 11 வயது சிறுவனுக்கும்

4. லா சலேத்தில் அன்னை காட்சியளித்த போது அக்குழந்தைகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்

5. சலேத் அன்னையின் கழுத்தில் இருந்த சங்கிலியிலுள்ள சிலுவையின் இரு பக்கங்களிலும் என்ன இருந்தனசுத்தியலும் குறடும். 

6. சலேத் அன்னை தன் உடலில் எத்தனை இடங்களில் ரோஜா மாலையை அணிந்திருந்தார்மூன்று இடங்களில். கிரீடத்தைச் சுற்றி ஒரு ரோஜா மாலை, தோள் பகுதியைச் சுற்றியிருந்த மேலாடையின் விளிம்பில் ஒரு ரோஜா மாலை மற்றும் கால் மிதியடிகளைச் சுற்றி ஒரு ரோஜா மாலை.

7. லா சலேத்தில் அன்னை காட்சியளித்தபோது காட்சி முழுவதும் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்அன்னை அழுதுகொண்டேயிருந்தார்

8. சலேத் அன்னையின் திருக்காட்சியை அங்கீகரித்த திருத்தந்தை யார்திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர்.

9. சலேத் அன்னையின் திருக்காட்சி எந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது1851.

10. புனித சலேத் அன்னையின் பக்தியைப் பரப்ப ஆரம்பிக்கப்பட்ட இரண்டு சபைகள் யாவைஇறுதி நாட்களுக்கான திருத்தூதர்கள் சபை (ஆண்களுக்கான சபை) இறைவனின் தாய் சபை (பெண்களுக்கான சபை).