அன்னையை அறிவோம் - 17
1. மரியன்னையின் மிகப்பெரிய பேராலயம் எங்குள்ளது? மேரி மேஜர் பேராலயம், உரோம் நகர்
2. அமலோற்பவ நதி என்று முன்பு அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் என்ன? மிசி சிபி நதி
3. பியத்தா என்று அழைக்கப்படும் வியாகுல மாதாவின் சுரூபத்தை வடிவமைத்தவர் யார்? மைக்கேல் ஆஞ்சலோ.
4. மரியன்னை முதல் முறையாக செபமாலையை யாரிடம் கொடுத்தார்? புனித தோமினிக்.
5. முதன் முறையாக உத்திரியம் தேவ அன்னையால் யாரிடம் கொடுக்கப்பட்டது? சைமன் ஸ்டாக்
6. ‘புனித கன்னி மரியாவிடம் உண்மையான பக்தி’ என்ற நூலை எழுதியது யார்? புனித லூயிஸ் தி மான்போர்ட்.
7. அமெரிக்க ஆயர்கள் மரியன்னையின் பக்தியைப் பற்றி வெளியிட்ட மடலின் பெயர் என்ன? இதோ உம் தாய்.
8. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் மரியன்னைப் பற்றிய கருத்துக்கள் அடங்கிய ஏடு எது? திரு அவை (லூமென் ஜென்சியும்).
9. பழைய ஏற்பாட்டில் மரியன்னையை குறிக்கும் முக்கியமான 5 குறியீடுகள் யாவை? நோவாவின் பேழை, எரியும் முட்செடி, ஆரோனின் செங்கோல், யாக்கோபின் ஏணி, எலியாவின் மேகம்.
10. 2018 பிப்ரவரி மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மரியன்னைக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய திருவிழா எது? எப்போது கொண்டாடப்படுகிறது? மரியா திரு அவையின் தாய் என்கிற திருவிழா. இவ்விழா பெந்தகோஸ்தே ஞாயிறுக்கு அடுத்தநாள் திங்கட்கிழமை இவ்விழா கொண்டாடப்படுகிறது.