அன்னையை அறிவோம் - 13
1. பாத்திமா
நகரில் மரியன்னையின் திருக்காட்சிகள் எப்போது தொடங்கி எப்போது வரை நிகழ்ந்தன? 13 மே 1917 முதல் 13 அக்டோபர் 1917 வரை.
2. பாத்திமா
நகரில் மரியன்னையின் திருக்காட்சியை அங்கீகரித்த திருத்தந்தை யார்? திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர்.
3. பாத்திமா
நகர் திருக்காட்சிகள் எந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டன? 1930.
4. அன்னையின்
இரக்கத்தின் ஆடை என்று அழைக்கப்படுவது யாது? உத்திரியம்.
5. ‘ஓ
என் இயேசுவே’ என்கிற செபம் மரியன்னையின் எந்த காட்சியில், யாருக்கு வழங்கப்பட்டது? 1917 ஆம் ஆண்டில் பாத்திமா காட்சியில் லூசியாவிற்கு வழங்கப்பட்டது.
6. 2002 முதல்
2003 வரையிலான ஆண்டு திரு அவையால் எந்த ஆண்டாகச் சிறப்பிக்கப்பட்டது? செபமாலை ஆண்டு.
7. அக்டோபர்
மாதத்தை செபமாலை மாதமாக அறிவித்த திருத்தந்தை யார்? திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர்.
8. எந்த
ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் செபமாலை மாதமாக நினைவுகூறப்படுகிறது? 1883 ஆம் ஆண்டிலிருந்து.
9. செபமாலை
பக்தி முயற்சியைக் குறித்து திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் வெளியிட்ட சுற்று மடல் பெயர் என்ன? உயர்ந்த திருத்தூதுப் பணி.
10. கன்னி
மாமரியின் பாமாலை என்கிற சுற்றுமடலை வெளியிட்ட திருத்தந்தை யார்? திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் (ஜான் பால்).