அன்னையை அறிவோம் - 14
1. திரு அவை கற்பிக்கிறபடி மரியாவின் வியாகுலங்கள் (துயரங்கள்) மொத்தம் எத்தனை? ஏழு.
2. மரியாவின் ஏழு வியாகுலங்களைக் கூறு.
1. சிமியோனின் இறைவாக்கு (லூக்கா 2:22-35)
2. எகிப்துக்கு தப்பி ஓடிப்போதல் (மத் 2:13-15)
3. எருசலேமில் இயேசு காணாமல் போதல் (லூக் 2:41-52)
4. சிலுவை சுமந்து சென்ற இயேசுவைச் சந்தித்தல் (லூக் 23:27-31)
5. இயேசு உயிர்விடுதல் (யோவா 19:25-30)
6. உயிரற்ற இயேசுவின் உடலை மடியில் சுமத்தல் (யோவா 19:38-40)
7. இயேசுவை அடக்கம் செய்தல் (யோவா 19:41-42)
3. மரியாவின் ஏழு வியாகுலங்களின் பக்தி முயற்சியைப் பரப்பியவர் யார்? புனித பிரிஜித் (கி.பி.1303-1373)
4. புதிய உடன்படிக்கைப் பேழை என்று அழைக்கப்படுபவர் யார்? புனித மரியா
5. மாலை நேர செபம் என்று செபமாலையை குறிப்பிட்ட திருத்தந்தை யார்? திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர்.
6. மரியன்னையின் திருக்காட்சியால் ஐரோப்பாவில் கட்டப்பட்ட இரண்டு புகழ்பெற்ற திருத்தலங்களைக் கூறு? லூர்து அன்னை திருத்தலம், பாத்திமா அன்னை திருத்தலம்.
7. இறைத்தாயின் நற்செய்தியாளர் என்று அழைக்கப்படுபவர் யார்? புனித லூக்கா.
8. மரியா லூர்து நகரில் (பிரான்ஸ்) தன்னை எப்பெயரில் வெளிப்படுத்தினார்? நாமே அமல உற்பவம்.
9. மரியன்னை பாத்திமா நகரில் (போர்ச்சுக்கல்) தன்னை எப்பெயரில் வெளிப்படுத்தினார்? நாமே செபமாலை அன்னை.
10. மரியன்னை பெனூ நகரில் (பெல்ஜியம்) தன்னை எப்பெயரில் வெளிப்படுத்தினார்? நாமே ஏழைகளின் அன்னை.