Friday, 15 May 2020

அன்னையை அறிவோம் - 15


அன்னையை அறிவோம் - 15






1. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தின் தாயகம் எதுகிரீட் தீவு.

2. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தின் இடது பக்கத்தில் இருக்கும் வானதூதர் யார்மிக்கேல்

3. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தின் வலது பக்கத்தில் இருக்கும் வானதூதர் யார்கபிரியேல்

4. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்திலுள்ள மிக்கேல் வானதூதர் கைகளில் எதை ஏந்தியிருப்பார்ஈட்டி, புளித்த காடி நிறைந்த பாத்திரம் மற்றும் கடற்காளானை நுனியில் கொண்ட ஒரு தடி.

5. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்திலுள்ள கபிரியேல் வானதூதர் கைகளில் எதை ஏந்தியிருப்பார்பழங்கால கிரீஸ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு சிலுவை மற்றும் நான்கு இரும்பு ஆணிகள்.

6. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தில் அன்னையின் வலப்பக்கத் தோளுக்கு மேல் இருக்கும் சுருக்கெழுத்துகள் யாவைஅவை எதை குறிக்கின்றனM. R. (Meter - Mother)  கிரேக்கச் சொல்லானமேத்தர்என்பதற்கு தாய், அன்னை, அம்மா என்பது பொருள்

7. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தில் அன்னையின் இடப்பக்கத் தோளுக்கு மேல் இருக்கும் சுருக்கெழுத்துகள் யாவைஅவை எதை குறிக்கின்றனTH u (Theou - God) கிரேக்கச் சொல்லானதேயூஎன்பதற்கு இறைவனின் அல்லது கடவுளின் என்பது பொருள்

8. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தில் குழந்தை இயேசுவின் தலைக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் கிரேக்க சுருக்கெழுத்துகள் யாவை? அவை எதை குறிக்கின்றன? Is Chs (Iesous Christos – Jesus Christ) கிரேக்கச் சொல்லானஈசோஸ் கிறிஸ்தோஸ்என்பதற்கு இயேசு கிறிஸ்து என்று அர்த்தம். 

9. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தில் குழந்தை இயேசுவை அன்னை எந்த கரத்தில் தாங்கி நிற்கிறார்இடது கரத்தில்.

10. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்திலுள்ள குழந்தை இயேசு பற்றிய பட விளக்கம் என்னஅலகையைக் கண்ட அச்சத்தினால் இயேசுவின் ஒரு காலிலுள்ள காலணி கழன்று விழ, தாயைப் பற்றிக்கொண்டு, அவர்களின் கரங்களில் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் குழந்தை இயேசு அமர்ந்திருப்பார்