Wednesday, 15 July 2020

இயேசுவின் தூய இரத்தம்

இயேசுவின் தூய இரத்தம் சிந்தப்பட்ட 7 நிகழ்வுகள்




1. இயேசு பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்யப்படுதல்
2. இயேசு கெத்சமனியில் இரத்த வியர்வை வியர்த்தல்
3. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு கசையால் அடிக்கப்படுதல்
4. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்படுதல்
5. இயேசு கல்வாரிக்கு சிலுவை சுமந்து செல்லுதல்
6. இயேசு சிலுவையில் அறையப்படுதல்
7. இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தித் திறத்தல்


ஏழு முறை சிந்தப்பட்ட இயேசுவின் தூய இரத்தத்திடம்
ஏழு தலையான பாவங்களுக்கு எதிராக எழுப்பப்படும் வேண்டல்கள்


1. மிகவும் தாழ்ச்சியுள்ள எங்கள் ஆண்டவரும், குருவுமான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே, நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே. 

ஏனென்றால் உம்முடைய குழந்தைப் பருவத்தில், உம்முடைய மனித வாழ்க்கையின் எட்டாம் நாளில், ஆபிரகாமின் உண்மையான மகனாக விருத்தசேதனத்தின் வேதனையைத் தாங்கி, உம்முடைய விலைமதிப்பில்லாத, மாசற்ற இரத்தத்தை நீர் சிந்தினீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பெருமைக்கும், உலக மாயைக்கும் எதிரான மனத்தாழ்மை என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.


2. தன் சேயின் மீது பெலிக்கன் பறவை கொண்டிருக்கும் அன்பைப் போன்ற அன்பு கொண்ட இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே. 

ஏனென்றால் கெத்சமனி தோட்டத்தில், உம் இதயத்தின் வேதனையிலிருந்து, இரத்த வியர்வை சிந்தினீரே, மேலும், உம்மை முழுவதுமாக மரணத்திற்கு கையளித்து, அதை உம்முடைய தந்தைக்கு நீர் ஒப்புக்கொடுத்தீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பேராசைக்கும் அவலத்திற்கும் எதிரான தாராளகுணம் என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.


3. மிகவும் தூய்மையான வாழ்க்கைத் துணையாகிய இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.   

ஏனென்றால் பிலாத்துவின் தீர்ப்பு மன்றத்தில் இரக்கமின்றி பிணைக்கப்படுவதற்கும், உமது கற்புடைய உடலை கற்றூணில் கட்டி, கசையால் அடிக்கப்பட்டு கொடூரமாகத் துன்புறுத்தப்படுவதற்கு நீர் ஒப்புக்கொடுத்தீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா சிற்றின்பத்திற்கும் காமவெறிக்கும் எதிரான கற்பு என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.



4. மிகவும் பொறுமையுள்ள ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.   

ஏனென்றால் உம்முடைய புனிதமான தலையிலே துளையிடும் முட்களால் முடிசூட்டப்பட்டும், நாணல் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டும் நீர் அளவில்லாத துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா கோபத்திற்கும் பழிவாங்கும் விருப்பத்திற்கும் எதிரான பொறுமை என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம்.

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.


5. நிதானம் மற்றும் சுய மறுப்பின் முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.   

ஏனென்றால் நீர் உம்முடைய சிலுவையைச் சுமப்பதற்கு முன்னும் பின்னும் உமது ஆடைகள் கிழிக்கப்படவும், அவை உம் உடலின் காயங்களை மீண்டும் திறந்து, புதிதாக இரத்தம் வரச் செய்யவும் நீர் துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பேராசை மற்றும் பெருந்தீனிக்கு எதிரான ஒறுத்தல் மற்றும் சுய மறுப்பு என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம். 

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.


6. நேர்மையான நல்ல சமாரியனாகிய இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே. 

ஏனென்றால் எங்கள் மீது பற்றி எரியும் உம் அன்பினால், எங்கள் மீட்பிற்காக உமது புனிதமான கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைக்கப்பட்டு சிலுவையில் அறைய நீர் துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, எல்லா பொறாமைக்கும் காழ்ப்புணர்வுக்கும் எதிரான சகோதர அன்பு என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம். 

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.


7. மிகவும் தெய்வீக சுறுசுறுப்புள்ள தலைமை குருவான இயேசு கிறிஸ்துவே, உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே! நிலையான புகழும் நன்றியும் என்றென்றும் உமக்கே.   

ஏனென்றால் உம்முடைய புனித விலாவினைத் ஈட்டியால் குத்தித் திறந்து, காயப்படுத்த நீர் துன்புற்றீர். உமது தூய இரத்தத்தை மிகவும் புனிதமாக சிந்தியதன் வழியாக, உம்முடைய பணியிலும், ஒவ்வொரு சமயப் பயிற்சியிலும் வரும் அனைத்து சோம்பல்களுக்கும் சோர்வுக்கும் எதிரான தெய்வீக சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம் என்கிற அருளை நாங்கள் உம்மிடம் இறைஞ்சுகிறோம். 

(விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே ...)

ஆண்டவரே, உம்முடைய சிலுவையினாலும் விலைமதிப்பற்ற இரத்தத்தினாலும் எங்களை மீட்டுக்கொண்ட உலக மீட்பரே, எங்களைக் காப்பாற்றும், எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆமென்.


திருத்தந்தையின் மோதிரம்


திருத்தந்தையின் மோதிரம்




ஒவ்வொரு திருத்தந்தையினுடைய வலது கையின் மோதிர விரலிலும்மீனவரின் மோதிரம்என்று அழைக்கப்படும் திருத்தந்தையின் மோதிரம் அணியப்படுகிறது.




இதில் ஒரு படகில் இருந்து புனித பேதுரு மீன்பிடித்தலைக் காட்டக் கூடிய சின்னம் காணப்படுகிறது. இது திருத்தூதர்கள்மனிதர்களைப் பிடிப்பவர்கள்’ (மாற்கு 1:17) என்ற விவிலிய மரபிலிருந்து பெறப்பட்ட ஒரு குறியீடாகும். மேலும் இதைச் சுற்றிய வண்ணம் திருத்தந்தையின் பெயரானது இலத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இது ஆயருக்கும் அவரது மறைமாவட்டத்துக்கும் இடையிலான திருமணத்திற்கு ஈடான உறவு ஒன்றிப்பைக் குறிக்கிறது. இது தெய்வீகமாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட ஓர் ஏற்பாடாக புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த மோதிரம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து தனியார் கடிதங்களுக்கான முத்திரையாகவும் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு முதல் திருத்தந்தையின் சுருக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.





இது ஒரு திருத்தந்தையின் அதிகாரத்தின் மிக சக்தி வாய்ந்த அடையாளமாக இருக்கக்கூடும். ஒரு திருத்தந்தை இறந்தவுடன், ‘கேமர்லெங்கோஎன்றழைக்கப்படும் திருத்தந்தையின் மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்கும் கர்தினாலால் அவருடைய மோதிரம் ஏனைய கர்தினால்களின் முன்பாக சுத்தியல் கொண்டு உடைக்கப்படுகிறது. இது அத்திருத்தந்தையின் ஆட்சியின் முடிவைக் காட்டுகிறது


ஆயரின் திருவுடைகள்



ஆயரின் திருவுடைகள்






1.  ஆயரின் தலைச்சீரா (Mitre)



ஆயர் திருப்பலியின் போது தலையில் அணியும் தொப்பியே ஆயரின் தலைச்சீரா எனப்படுகிறதுஇது இரட்டைக் கோபுர வடிவில் மடக்கும் வகையில் அமைந்திருக்கும்முன்னும் பின்னுமாக இரு கூம்பு வடிவத்திலானதடித்த மேல் நோக்கிய பகுதிகளும் உச்சிப்பகுதியிலிருந்து கீழ்வாட்டில் ஒன்றோடொன்று நடுப்பகுதி வரை மெல்லிய துணி கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்பின் பகுதியில் இரு பட்டை வடிவிலான அழகிய வேலைப்பாடுடைய சிறிய தொங்கல் இருக்கும்இது பொதுவாக திருத்தந்தைகர்தினால்கள் மற்றும் ஆயர்களால் அணியப்படும்.



2. ஆயரின் சிறுதொப்பி (Skull cap)



சிறிய வட்ட வடிவிலான தொப்பி இதுதிருத்தந்தைகர்தினால்கள் மற்றும் ஆயர்களால் உச்சந்தலையில் அணியப்படும்திருப்பலி நேரத்தில் நற்கருணை மன்றாட்டின் போதன்றி ஏனைய நேரத்தில் அணியப்படும்இதை ஆயர்கள் வெளிர் நீல (பிங்க்நிறத்திலும் கர்தினால்கள் சிகப்பு நிறத்திலும் திருத்தந்தை வெள்ளை நிறத்திலும் பயன்படுத்தலாம்.



3. ஆயரின் செங்கோல் (Crozier / Pastoral staff)



ஆயரின் திருப்பொழிவுச் சடங்கின் போது அவருக்குத் தரப்படுகிறதுஇந்த செங்கோலை ஆயர் ஆடம்பரமான திருவழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுத்துவார்இது ஆயருடைய அதிகாரத்தையும்ஆட்சியுரிமையையும் காட்டக்கூடிய அடையாளமாக விளங்குகிறதுஅதோடு சேர்த்து நம்பிக்கை மற்றும் நன்னெறி ஒழுக்கம் போன்றவற்றில் தன் மந்தையின் மீதுஆயராக அவருக்கு இருக்கும் பொறுப்பையும் கடமையையும் இது  உணர்த்துகிறது.



4. ஆயரின் மோதிரம் (Episcopal Ring)



வலது கையின் மோதிர விரலின் ஆயரால் அணியப்படும்இதுவும் அவருடைய ஆட்சியுரிமைக் குறிக்கும்மேலும் சிறப்பாக இது திரு அவை  / மறைமாவட்டத்தின் மீது அவருக்கு இருக்க வேண்டிய பிரமாணிக்கத்தை நினைவூட்டுகிறது.




5.  பேராயரின் திருநேரியல் (Pallium)



இது இரண்டு அங்குல அகலமுடையதாக வட்ட வடிவில் கழுத்தைச் சுற்றி அணியப்படும்இது பேராயரின் திருவுடைகளுள் ஒன்றுஇதன் முன்பகுதியிலும் பின் பகுதியிலுமாக அதே இரு அங்குல அகலத்தில் பன்னிரெண்டு அங்குல நீளத்தில் ஒரு கீழ்நோக்கித் தொங்கும் பட்டை காணப்படும்இது செம்மறி ஆட்டுத் தோலால் செய்யப்பட்டு திருத்தந்தையால் பேராயர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை (தூய பேதுரு தலைமைப்பீட விழாவன்றுஅளிக்கப்படும்.இதில் ஆறு சிறிய கருப்பு அல்லது சிவப்பு நிற  சிலுவை அடையாளம் காணப்படும்.


6. ஆயரின் கழுத்தில் அணியப்படும் சிலுவை (Pectoral Cross)





இது திரு அவையின் முக்கிய திருப்பணியாளர்கள் என்பதைக் குறித்துக்காட்டுவதற்காக அணியப்படுகிறதுவழிபாட்டு நேரத்திலும்பிற சமயங்களிலும் கூட மார்பின் மீது படும் வகையில் இச்சிலுவையானது அணியப்படுகிறதுதொடக்க காலங்களில் இத்திருச்சிலுவையினுள் இயேசுவின் திருச்சிலுவையின் அருளிக்கமோ அல்லது புனிதர்களின் அருளிக்கங்களோ வைக்கப்படுவதும் உண்டுஆனால் இப்போது இது நடைமுறையில் இல்லை.


--------------------