அன்னையை அறிவோம் - 1
1. மரியாவின் சொந்த ஊர் எது? நாசரேத் (லூக்கா1:26).
2. மரியாவின் கணவர் யார்? எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்? புனித யோசேப்பு - தாவீது குடும்பத்தினர் (லூக்கா 1:27).
3. இறைவனின் திட்டத்தை அன்னை மரியாவிடம் அறிவித்த வானதூதர் யார்? கபிரியேல் வானதூதர் (லூக்கா 1:26-38).
4.'அருள் நிறைந்த மரியே…’ என்ற இறைவேண்டலின் முன் பகுதியைத் தொடுத்தவர்கள் யார்? கபிரியேல் வானதூதர் (லூக்கா 1:26-28), எலிசபெத் (லூக்கா 1:42).
5. மங்கள வார்த்தையைக் கேட்ட மரியா வானதூதருக்கு என்ன பதில் தந்தார்? “நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்;”. (லூக்கா 1:38).
6. மரியா எலிசபெத்தைச் சந்திக்க எந்த ஊருக்குச் சென்றார்? யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊர் (அயின்கரீம்) (லூக்கா 1:39).
7. ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்’ என்று மரியாவிடம் யார் கூறியது? எலிசபெத்து (லூக்கா 1:42).
8. ‘மரியாவின் புகழ் பாடல்’ என்ற பாடலை மரியா எப்போது பாடினார்? கருவுற்ற எலிசபெத்தை மரியா சந்தித்தபோது (லூக்கா1:46-55).
9. மரியாவின் புகழ் பாடலை முன்னதாகவே பழைய ஏற்பாட்டில் பாடியிருக்கும் பெண்மணி யார்? சாமுவேலின் தாய் அன்னா (1 சாமுவேல் 2:1-10).
10. எருசலேம் ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயேசுவிடம் மரியா என்ன சொன்னார்? “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும், நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே!” (லூக்கா 2:48).