அன்னையை அறிவோம் - 2
1. சிமியோன் மரியாவைக் குறித்துச் சொன்ன இறைவாக்கு என்ன? “உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக்கா 2:35).
2. ‘மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்’- விவிலியத்தில் இவ்வசனம் எத்தனை முறை வருகின்றது? இரண்டு முறை (லூக்கா 2:19, 2:51).
3. ‘இரசம் தீர்ந்துவிட்டது’ என்று மரியா எப்போது இயேசுவிடம் கூறினார்? கானாவில் நடந்த திருமணத்தின் போது (யோவான் 2:1-3).
4. யோவான் நற்செய்தியில் மரியா பேசிய கடைசி வார்த்தைகள் எவை? ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ (யோவான் 2:5).
5. மரியாவைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்ட சீடர் யார்? இயேசுவின் அன்புச் சீடர் - புனித யோவான் (யோவான் 19: 27).
6. பெந்தகோஸ்தே நாளன்று தூய ஆவியார் இறங்கி வந்த போது மரியா எங்கே இருந்தார்? திருத்தூதர்களுடன் மேல் மாடியில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் (திருத்தூதர் பணிகள் 1:14).
7. கன்னி மரியாவின் விண்ணேற்பு பற்றிய உருவகம் காணக்கிடக்கும் விவிலிய புத்தகத்தின் பெயரையும் அதிகாரத்தையும் குறிப்பிடுக? திருவெளிப்பாடு 11.
8. ஒத்தமைவு நற்செய்தி நூல்களில் இயேசுவின் தாய் மரியாவின் பெயர் எத்தனை முறை இடம்பெறுகிறது? மொத்தம் 18 முறை. மத்தேயு 5 முறை, லூக்கா 12 முறை, மாற்கு 1 முறை.
9. பழைய ஏற்பாட்டில் மரியாவுக்கு அடையாளமாக விளங்கிய பெண்கள் மூவரின் பெயர்களைக் கூறு. ஏவாள், யூதித்து, எஸ்தர்.
10. யோவான் நற்செய்தியாளர் மரியாவைப் பற்றி எத்தனை இடங்களில் எழுதியுள்ளார்? அவை யாவை? இரண்டு இடங்களில் . கானாவில் நடந்த திருமணம் (யோவான் 2:1-11), கல்வாரியில் சிலுவையின் அடியில் (யோவான் 19: 25-27).