அன்னையை அறிவோம் - 3
1. மரியா
என்ற பெயர் எபிரேயத்தில் எப்படி வழங்கப்படுகிறது? மிரியம்.
2. மரியாவின்
தந்தையின் பெயர் என்ன? புனித சுவக்கின்
3. மரியாவின்
தாயின் பெயர் என்ன? புனித அன்னா
4. மரியாவை
அவரின் பெற்றோர் எந்த வயதில் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர்? மூன்று வயதில்.
5. திரு
அவையின் மரபுப்படி மரியா எத்தனை ஆண்டுகள் கோவிலில் தங்கியிருந்தார்? 12 ஆண்டுகள்.
6. மரியா
எந்த குலத்தில் பிறந்தார்? யூதா குலத்தில் பிறந்தார்.
7. மரியா
எந்த குடும்பத்தில் பிறந்தார்? தாவீது அரசரின் குடும்பத்தில் பிறந்தார்.
8. உலகத்தின்
புதிய இடங்களை கண்டுபிடிக்க கொலம்பஸ் பயணம் மேற்கொண்ட கப்பலின் பெயர் என்ன? புனித மரியா (Santa Maria).
9. தேவதாயின்
தூய்மையை அறிவுறுத்தும் மலர் எது? லீலி மலர்.
10. ‘மரியன்னையின்
மாதம்’ என்று எந்த மாதத்தை அழைக்கின்றோம்? மே மாதம்.