அன்னையை அறிவோம் -
4
1. திரு அவையின் மரபு வாயிலாக மரியன்னையின் திருப்படத்தை முதலில் வரைந்தவர் யார்? புனித லூக்கா.
2. ‘செபமாலையின் மாதம்’ என்று எந்த மாதத்தை அழைக்கின்றோம்? அக்டோபர் மாதம்.
3. மரியாவை ஒரே நாளில் மும்முறை வாழ்த்தி நாம் செபிக்கும் செபம் எது? மூவேளை செபம்.
4. ‘விண்ணக அரசியே!’ என்னும் மூவேளை செபத்தை எந்த காலத்தில் பயன்படுத்துகிறோம்? பாஸ்கு காலத்தில்
5. ‘மிகவும் இரக்கமுள்ள தாயே’ என்ற செபத்தை எழுதியவர் யார்? புனித பெர்னாந்து.
6. சிலுவைப்பாதையில் எத்தனையாவது நிலையில் இயேசு தன் தாயை சந்திக்கிறார்? நான்காம் நிலை.
7. சிலுவைப்பாதையில் உயிரற்ற இயேசுவின் திருவுடல் எத்தனையாவது நிலையில் மரியின் மடியில் கிடத்தப்படுகிறது? பதிமூன்றாம் நிலை.
8. கத்தோலிக்க திரு அவையில் மரியன்னையின் மிகவும் புகழ்மிக்க திருப்படம் எது? இடைவிடா சகாய அன்னையின் திருப்படம்
9. மரியன்னையின் பக்தியோடு அதிக தொடர்புடைய முக்கியமான இரு அடையாளப் பொருள்கள் எவை? செபமாலை, உத்தரியம்.
10. ‘செபமாலையின் திருத்தந்தை’ என்று அழைக்கப்பட்டவர் யார்? திருத்தந்தை 13 ஆம் லியோ (சிங்கராயர்).