அன்னையை அறிவோம் - 30
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)
1.'என்னிடம் செபமாலையைச் செபிக்கும் ஒரு படையிருந்தால் அதைக்கொண்டு உலகத்தையே மனந்திருப்பி விடுவேன்’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்
2. ‘அன்னையை அழைத்தால் அதன் எதிரொலி இயேசு என்று ஒலிக்கும்’ - புனித லூயி மான்போர்ட்.
3. ‘செபமாலை கிறித்தவ மக்களை உயர்த்தும்’ - திருத்தந்தை 3 ஆம் உர்பன்.
4. ‘மரியாவின் நாமம் தேனை விட நாவுக்கு இனிமையானது. பரவசப்படுத்தும் பாட்டை விட செவிக்கு இனிமை தருவது’ - புனித அந்தோனியார்.
5. ‘மரியா இயேசுவை தனது உதிரத்தில் தாங்கும் முன்பே உள்ளத்தில் தாங்கினார்’ - புனித அகுஸ்தினார்.
6. ‘செபமாலையை நீ நன்றாக சொன்னால் செபங்களில் அதுவே சிறந்த செபமாகும்’ - புனித பிரான்சிஸ்கு சலேசியார்.
7. ‘என் உடல் முழுவதும் நாவாக மாறினாலும் அன்னையின் புகழைப் பாடித் தீர்க்க முடியாது’. - புனித பொன்வாய் அருளப்பர்.
8. ‘கிறிஸ்துவை அறிய வேண்டுமா? அன்னை மரியாவிடம் செல்லுங்கள்’. - திருத்தந்தை ஆறாம் பவுல்.
9. ‘ஏவாள் நமக்கு சாவைக் கொண்டு வந்தார். மரியாவோ நமக்கு வாழ்வைக் கொண்டு வந்தார்’. – புனித எப்ரேம்
10.‘ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டது. நம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியா அவிழ்த்துவிட்டாள்’. – புனித இரேனியுஸ்