Friday, 29 May 2020

அன்னையை அறிவோம் - 29


அன்னையை அறிவோம் - 29

(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)

  

1. ‘மரியாவின் பிள்ளை அவலமாய் சாகாது’. - புனித தொன் போஸ்கோ.

2.‘மாலுமிகள் விடிவெள்ளியின் பிரகாசத்தால் துறைமுகத்துக்கு வழிநடத்தப்படுவதைப் போல்கிறிஸ்தவர்கள் மரியாவால் மோட்சத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள்’. - புனித தாமஸ் அக்குவினாஸ் 

3. ‘நான் திரு அவையில் இல்லாவிட்டாலும் எனக்கு கவலையில்லைதேவ அன்னையை வணங்க மட்டும் என்னை அனுமதித்தால் போதும்’ -  ஜெஸ்டர்டன்.

4. ‘நற்செய்தியின் சுருக்கம் செபமாலை’ - திருத்தந்தை 6 ஆம் பத்திநாதர்.

5. ‘செபமாலையை விட பெரிய புதையல் எதுவும் இல்லை’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்.

6.‘செபமாலை என் விருப்பத்துக்குரிய செபம்அது அற்புதமான செபம்ஏனென்றால் அது எளிமையையும்ஆழத்தையும் கொண்டது’. திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 

7. 'அன்னையைப் பின்பற்றுவோர் வழி தவறியதில்லைஅவள் உதவியை நாடுவோர்அவளைப்பற்றி சிந்திப்பவர்கள் தவறான பாதையில் செல்வதில்லை’ - புனித பெர்னார்டு.

8. ‘இறைவனுடைய இரக்கம் புதையலாக அவள் கைகளில் உள்ளது’- புனித பீட்டர் தமியன்.

9. ‘மரியன்னையை உன் உள்ளத்தில் வைத்தால் இயேசு உன் உள்ளத்தில் வளருவார்’ - பேராயர் புல்டன் ஷீன்.

10.‘தன் மகனுக்கு மேல் தன்னைப் புகழ்வதை அன்னை ஒருபோதும் விரும்புவதில்லை’ - திருத்தந்தை 23 ஆம் யோவான் பவுல்.