அன்னையை அறிவோம் - 28
1. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘கன்னியே என்கிற புகழுரைகள்’ மொத்தம் எத்தனை? 6.
2. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் கன்னியே என்கிற புகழுரைகளைக் கூறு?
- பேரறிவுமிகு கன்னியே
- வணக்கத்திற்குரிய கன்னியே
- போற்றுதற்குரிய கன்னியே
- வல்லமையுள்ள கன்னியே
- பரிவுள்ள கன்னியே
- நம்பிக்கைக்குரிய கன்னியே
3. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் மரியாவின் பண்புகளைச் சாற்றும் புகழுரைகள் மொத்தம் எத்தனை? 6.
4. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் மரியாவின் பண்புகளைச் சாற்றும் புகழுரைகளைக் கூறு?
- நீதியின் கண்ணாடியே
- ஞானத்திற்கு உறைவிடமே
- எங்கள் மகிழ்ச்சியின் காரணமே
- ஞானம் நிறைந்த பாத்திரமே
- மாட்சிக்குரிய பாத்திரமே
- பக்தி நிறை பாத்திரமே
5. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘பழைய ஏற்பாட்டு உருவகப் புகழுரைகள்’ மொத்தம் எத்தனை? 7.
6. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் பழைய ஏற்பாட்டு உருவகப் புகழுரைகளைக் கூறு?
- மறைபொருளின் ரோசா மலரே
- தாவீது அரசரின் கோபுரமே
- தந்த மயமான கோபுரமே
- பொன் மயமான ஆலயமே
- உடன்படிக்கையின் பேழையே
- விண்ணகத்தின் வாயிலே
- விடியற்காலை விண்மீனே
7. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘மக்கள் தொடர்புடைய புகழுரைகள்’ மொத்தம் எத்தனை? அவை யாவை?
மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘மக்கள் தொடர்புடைய புகழுரைகள்’ மொத்தம் 5.
- நோயுற்றோரின் ஆரோக்கியமே
- பாவிகளுக்கு அடைக்கலமே
- துயருறுவோருக்குத் ஆறுதலே
- கிறிஸ்தவர்களுடைய துணையே (சகாயமே)
- புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே
8. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘அரசியே என்கிற புகழுரைகள்’ மொத்தம் எத்தனை? 13.
9. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் அரசியே என்கிற புகழுரைகளைக் கூறு?
- வானதூதர்களின் அரசியே
- முதுபெரும் தந்தையரின் அரசியே
- இறைவாக்கினர்களின் அரசியே
- திருத்தூதர்களின் அரசியே
- மறைசாட்சிகளின் அரசியே
- இறையடியார்களின் அரசியே
- கன்னியரின் அரசியே
- அனைத்துப் புனிதர்களின் அரசியே
- அமல உற்பவியான அரசியே
- விண்ணேற்பு பெற்ற அரசியே
- திருச் செபமாலையின் அரசியே
- குடும்பங்களின் அரசியே
- அமைதியின் அரசியே
10. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் 2020 ஜுன் 20 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்த புதிய புகழுரைகள் யாவை?
- இரக்கத்தின் அன்னையே
- எதிர்நோக்கின் அன்னையே
- புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே