அன்னையை அறிவோம் - 27
1. நாம் தற்போது பயன்படுத்தும் மரியின் மன்றாட்டுமாலையின் உண்மையான பெயர் என்ன? லொரேட்டோ மன்றாட்டுமாலை.
2. லொரேட்டோ மன்றாட்டுமாலை யாரால் எப்போது திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டது? திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் - 1587.
3. லொரேட்டோ மன்றாட்டுமாலையில் அங்கீகரிக்கப்பட்ட மரியின் புகழுரைகள் மொத்தம் எத்தனை? 49
(பழையது) அல்லது 54 (புதியது).
4. ‘அமைதியின் அரசியே’ என்கிற புகழுரை அன்னைக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது? திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் - 1917.
5. ‘திரு அவையின் அன்னையே’ என்கிற புகழுரை அன்னைக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது? திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் - 1980.
6.
‘குடும்பங்களின் அரசியே’ என்கிற புகழுரை அன்னைக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது? திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் - 1995.
7. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘புனித என்கிற புகழுரைகள்’ மொத்தம் எத்தனை? 3.
8. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் புனித என்கிற புகழுரைகளைக் கூறு?
- புனித மரியே
- இறைவனின் புனித அன்னையே
- கன்னியருள் புனித கன்னியே
9. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘அன்னையே என்கிற புகழுரைகள்’ மொத்தம் எத்தனை? 14.
10. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் அன்னையே என்கிற புகழுரைகளைக் கூறு?
- கிறிஸ்துவின் அன்னையே
- இறையருளின் அன்னையே
- தூய்மைமிகு அன்னையே
- கன்னிமை குன்றா அன்னையே
- மாசு இல்லாத அன்னையே
- பாவக் கறையில்லா அன்னையே
- அன்புக்குரிய அன்னையே
- வியப்புக்குரிய அன்னையே
- நல்ல ஆலோசனை அன்னையே
- படைத்தவரின் அன்னையே
- மீட்பரின் அன்னையே
- திரு அவையின் அன்னையே
- இரக்கத்தின் அன்னையே
- எதிர்நோக்கின் அன்னையே