Tuesday, 26 May 2020

அன்னையை அறிவோம் - 26


அன்னையை அறிவோம் - 26




1. புனித மெஜீகொரி அன்னை தன்னுடைய காட்சியில் தனது பெயராக எதைக் குறிப்பிட்டார்நான்தான் அருள் நிறைந்த கன்னி மரியா. 

2. எந்த செபம் சொல்லி செபித்தபோது புனித மெஜீகொரி அன்னை சிரித்த முகத்தோடு இருந்தார்நம்பிக்கை அறிக்கை.

3. புனித மெஜீகொரி அன்னை எல்லா காட்சிகளின் இறுதியிலும் சொல்லியது என்னகடவுளின் அமைதியில் சென்று வாருங்கள்’.

4. உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்கள் அங்கிருந்து விடுதலை பெற்று விண்ணகம் போகும் நாளாக புனித மெஜீகொரி அன்னை தன்னுடைய காட்சியில் எந்த நாளைக் கூறினார்கிறிஸ்து பிறப்பு நாளில்.

5. மெஜீகொரியில் காட்சியளித்தபோது அன்னையின் தலையைச் சுற்றிலும் என்ன காணப்பட்டனவட்ட வடிவத்தில் 12 தங்க நட்சத்திரங்கள் மின்னின

6. மெஜீகொரியில் காட்சியளித்தபோது அன்னை எந்த  நிறத்தில் மேலாடை  அணிந்திருந்தார்சாம்பல் நிற மேலாடை.  

7. மெஜீகொரியில் காட்சியளித்தபோது அன்னை எந்த நிறத்தில் தலை முக்காடு அணிந்திருந்தார்வெள்ளை நிற தலை முக்காடு

8. மெஜீகொரியில் நடந்த அன்னையின் காட்சிகளின் மட்டில் நேர்மறையான தனிப்பட்ட அக்கறை கொண்டிருந்த திருத்தந்தை யார்திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்.

9. மெஜீகொரி அன்னையின் காட்சியைப் பற்றி அதிகமான நூல்களை எழுதியவர் யார்அருள்பணியாளர். லொரண்டைன்.

10. மெஜீகொரியில் நடந்த அன்னையின் காட்சிகளை திரு அவை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளதாஇல்லை. காட்சிகளுக்கு இதுவரை திரு அவையின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் எதுவும் இல்லை. 2019 ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மெஜீகொரிக்கு திருப்பயணம் செல்வதை மட்டும் அங்கீகரித்துள்ளார்