Monday, 25 May 2020

அன்னையை அறிவோம் - 25


அன்னையை அறிவோம் - 25




1.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னையே என்கிற புகழுரை மரியன்னையின் மன்றாட்டு மாலையில் யாரால் சேர்க்கப்பட்டதுதிருத்தந்தை 5 ஆம் பத்திநாதரால்

2.        மே 24 இல் கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழா எப்போதிலிருந்து வழக்கத்திற்கு வந்தது1809 ஆம் ஆண்டு நெப்போலியனின் படை திருத்தந்தை ஏழாம் பத்திநாதரை சிறை பிடித்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது 1814 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி நெப்போலியனின் அடிமைத்தனத்தில் இருந்து திருத்தந்தை விடுதலையானார். அதிலிருந்து 12 மாதங்களுக்குப் பின்பு அதாவது 1815 ஆம் ஆண்டு திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் தன்னுடைய விடுதலையின் நினைவாக, சிறை வைக்கப்பட்டபோது அன்னையிடம் வேண்டிக்கொண்டதற்கேற்ப, கிறிஸ்தவர்களின் சகாய அன்னை திருவிழாவினை ஏற்படுத்தி மே 24 ஆம் தேதி இவ்விழாவை உலகம் முழுவதும் கொண்டாட ஆணையிட்டார்

3.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மீது அதிகமான பக்தியைக் கொண்டிருந்த புனிதர் யார்புனித தொன் போஸ்கோ.

4.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தியை உலகம் முழுவதும் பரப்பும் துறவற சபை எதுசலேசிய சபை

5.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்காக கட்டப்பட்ட முதல் பேராலயம் எங்குள்ளதுஇத்தாலியிலுள்ள தூரின் என்கிற நகரில் உள்ளது

6.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்கான முதல் பேராலயத்தை கட்டியவர் யார்? எப்போது கட்டப்பட்டதுபுனித தொன் போஸ்கோ – 1868. 

7.       புனித தொன் போஸ்கோ மரியன்னையை எப்படி அழைப்பார்மடோனா

8.       ஆஸ்திரேலியாவின் பாதுகாவலியாக கிறிஸ்தவர்களின் சகாய அன்னையை அறிவித்த திருத்தந்தை யார்? எப்போதுதிருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் - 1844.

9.       இரண்டாம் வத்திகான் சங்கத்தில் மரியன்னைக்கு அளிக்கப்பட்ட சில சிறப்பு பட்டங்கள் யாவைபரிந்துரைப்பவர், துணையாக நிற்பவர், உதவி அளிப்பவர்.

10.     மரியன்னையை வணங்குவது பற்றி இரண்டாம் வத்திகான் திருச்சங்கம் கூறுவது என்னநம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு நம்பிக்கை கொண்டோர்கள் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்’. (திரு அவை: 82).