அன்னையை அறிவோம் - 24
1. மெஜீகொரி என்கிற கிராமத்தில் மரியன்னை யாருக்கு காட்சி அளித்தார்? 4 சிறுமிகள் (இவான்கா, மிரியானா, விஷ்கா, மரியா) மற்றும் 2 சிறுவர்கள் (இவான், யாக்கவ்).
2. மெஜீகொரி அன்னையின் காட்சி பெற்ற குழந்தைகளின் வயது விபரம் என்ன? இவான்கா (15), மிரியானா (16), விஷ்கா (17), மரியா (16), இவான் (16), யாக்கவ் (10).
3. மெஜீகொரியில் அன்னையின் முதல் காட்சி எப்போது நடைபெற்றது? ஜீன் 24, 1981.
4. மெஜீகொரியில் மரியாவின் காட்சி பெற்ற இவான்காவிற்கு கடவுள் கொடுத்த சிறப்பு சலுகை என்ன? இறந்துபோன தம் தாயிடம் 5 முறை பேசும் அருளை இவான்காவிற்கு கடவுள் கொடுத்தார்.
5. இவான்காவிற்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாது? குடும்பங்களுக்காக செபிப்பது.
6. மிரியானாவுக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாது? கடவுளை நம்பாத நாத்திகர்களின் மனமாற்றத்திற்காக செபிப்பது.
7. விஷ்காவிற்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாது? நோயாளிகளுக்காக செபிப்பது.
8. இவானுக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாது? குருக்களுக்காகவும் இளையோருக்காகவும் செபிப்பது.
9. மரியாவுக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாது? உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பது.
10. யாக்கவ் என்பவருக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாது? நோயாளிகளுக்காக செபிப்பது.