Saturday, 23 May 2020

அன்னையை அறிவோம் - 23


அன்னையை அறிவோம் - 23


  

1. புனித குவாதலூப் அன்னையின் திருவுருவத்தின் கண்களில் தெரியும் உருவம் யாருடையதுபுனித யுவான் தியேகோ. 

2. காட்சியின் போதுநீர் யார்?’ என்று கேட்ட யுவான் தியேகோவிற்கு புனித குவாதலூப் அன்னை என்ன பதில் சொன்னார்கல்லாலான பாம்பு தெய்வத்தைக் காலால் நசுக்குபவள்’. 

3. யுவான் தியேகோவின் சித்தப்பா யுவான் பெர்னார்டினோவிற்கு புனித குவாதலூப் அன்னை எத்தனை முறை காட்சி அளித்தார்ஒரு முறை. 

4. புனித குவாதலூப் அன்னையின் இடுப்பில் காணப்படும் கறுப்பு நிற இடைக்கச்சை எதைக் குறிக்கிறதுஅஸ்டக் இனத்தின் பேறுகாலப் பெண்கள் அணியும்  கறுப்பு நிற இடைக்கச்சையை மரியா அணிந்திருப்பதன் வழியாக மரியாவும் இயேசுவை கருத்தரித்தவர் என்று காட்டுகிறார்

5. புனித குவாதலூப் அன்னையின் கழுத்தில் இருக்கும் சிலுவையின் நிறம் என்னகறுப்பு

6. புனித குவாதலூப் அன்னையின் திருவுருவம் பதிந்த யுவான் தியேகோவின் மேற்போர்வை எதனால் செய்யப்பட்டதுகள்ளிச் செடியின் நாரிலிருந்து செய்யப்பட்டது.

7. யுவான் தியேகோவின் மேற்போர்வையில் அற்புதமாகப் பதிந்த ஓவியத்தை எப்பெயரால் வணங்க வேண்டுமென்று அன்னை கேட்டுக்கொண்டார்என்றும் கன்னியான குவாதலூப் மரியா

8. 1999 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாவலியாக யாரை அறிவித்தார்புனித குவாதலூப் அன்னையை.

9. புனித குவாதலூப் அன்னையின் திருவிழாவை டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடும்படி அறிவித்த திருத்தந்தை யார்திருத்தந்தை ஏழாம் அலெக்ஸாண்டர்.

10. ‘குவாதலூப்பில் அதிசயங்கள்என்ற நூலை எழுதியவர் யார்பிரான்சிஸ் ஜான்சன்