அன்னையை அறிவோம் - 22
1. புனித குவாதலூப் அன்னை எப்போது, யாருக்கு காட்சியளித்தார்? 1531 ஆம் ஆண்டு யுவான் தியேகோ என்பவருக்கு.
2. புனித குவாதலூப் அன்னையின் திருத்தலம் எந்த நாட்டில் உள்ளது? மெக்சிகோ.
3. புனித குவாதலூப் அன்னை காட்சியளித்த மலையின் பெயர் என்ன? டெப்பியக் மலை.
4. புனித குவாதலூப் அன்னையின் திருக்காட்சியை அங்கீகரித்த திருத்தந்தை யார்? திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட்.
5. புனித குவாதலூப் அன்னையின் திருக்காட்சி எந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது? 1754.
6. புனித குவாதலூப் அன்னை தன்னுடைய காட்சியில் முதலில் கூறிய வாழ்த்து என்ன? ‘நினா மியா’. இதற்கு ‘என்னுடைய குழந்தையே’ என்று அர்த்தம்.
7. புனித குவாதலூப் அன்னை ஆயர் நம்புவதற்காக கொடுத்த அடையாளம் என்ன? குளிர் காலத்தில் முள்ளும் பாறையும் மிகுந்த மலையில் பூத்த காஸ்டிலியன் ரோஜா மலர்கள்.
8. யுவான் தியேகோ தன்னுடைய மேலாடையிலிருந்த ரோஜா மலர்களை ஆயரின் முன்பாக கொட்டிய போது மேலாடையில் என்ன காணப்பட்டது? கன்னி மரியாவின் ஓவியம் அற்புதமாக அதிலே வரையப்பட்டிருந்தது.
9. புனித குவாதலூப் அன்னை யுவான் தியேகோவுக்கு எத்தனை முறை காட்சியளித்தார்? 4 முறை.
10. புனித குவாதலூப் அன்னை அமெரிக்காவின் அன்னையாக எப்போது யாரால் அறிவிக்கப்பட்டார்? 1999 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்.