Monday, 1 June 2020

இயேசுவின் தூய்மைமிகு இருதயம்


இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் பழங்கால ஓவியம்




பல நூற்றாண்டுகளாக இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீதான பக்தி கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீதான பக்தி கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், 17 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பாக புனித மார்கரெட் மேரி அலகோக்கிற்கு தனிப்பட்ட வெளிப்பாடுகள் வழங்கப்படும் வரையில் இது பிரபலமான ஒரு பக்திமுயற்சியாக இருக்கவில்லைஇருப்பினும் புனித மெக்டில்டா (இறப்பு 1298) மற்றும் புனித கெர்ட்ரூட் (இறப்பு 1302) ஆகியோர் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீது சிறப்பான பக்தி கொண்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறதுஆனால் அதுவரை கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களுக்கு’ வலுவான பக்தியைக் கொண்டிருந்தனர்இதற்கான முக்கியக் காரணம் யாதெனில் புனித பூமியிலிருந்து சிலுவைப்போருக்குப் பின்பாகத்  திரும்பியவர்கள்  இயேசுவின் திருப்பாடுகளின் மீது கொண்டிருந்த பேரார்வம் ஆகும்இடைக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் ஆழத்தை அவர் அனுபவித்த பல்வேறு காயங்கள் மூலம் உணர்ந்தனர்அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இதயத்தைத் துளைத்த ‘மார்பு’ அல்லது ‘பக்க’ காயம் ஆகும்.

கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, ‘கிறிஸ்துவின் காயங்களுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு திருவிழாவுக்கான ஆரம்ப சான்றுகள் துரிங்கியாவின் ஃபிரிட்ஸ்லரின் மடாலயத்திலிருந்து வந்தனஅங்கு பதினான்காம் நூற்றாண்டில் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவின் எண்கிழமைகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு விழா கொண்டாடப்பட்டது. … பதினைந்தாம் நூற்றாண்டில் இத்திருவிழா வெவ்வேறு நாடுகளுக்குசாலிஸ்பரி (இங்கிலாந்து), ஹீஸ்கா மற்றும் ஜாகா (ஸ்பெயின்), வியன்னா மற்றும் டூர்ஸ் வரை பரவியதுமேலும் கார்மல் துறவற சபையினர்,  பிரான்சிஸ்கன் துறவற சபையினர்தோமினிகன் துறவற சபையினர் மற்றும் பிற துறவற சபையினரின் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டது.’

தொடக்கத்தில் இயேசுவின் காயங்களுக்கான விழா உலகளாவிய ஒன்றாக இல்லைஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த விழா நடந்த அதே நாளில் தனது தூய்மைமிகு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவை விரும்புவதாக இயேசு புனித மார்கரெட் மேரி அலகோக்கிற்கு வெளிப்படுத்தினார்.

புனித மார்கரெட் மேரியின் வெளிப்பாடுகளுக்கு முன்புஇயேசு கிறிஸ்துவின் மற்ற காயங்களுடன் இயேசுவின் தூய்மைமிகு இருதயமும் பொதுவாக ஒரு குறியீட்டு முறையில் சித்தரிக்கப்பட்டதுஎடுத்துக்காட்டாகஇங்கிலாந்திலிருக்கும் இந்த ஓவியம் கி.பி. 1490 - 1500 ஆண்டைச் சார்ந்தது.  இது இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் ஆரம்பகால ஓவியங்களுள் ஒன்றாகும்இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலுள்ள போட்லியன் நூலக காப்பகத்தில் உள்ளது.




இப்படத்தில் இயேசுவின் ஐந்து காயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனமையத்தில் ஓர் எளிய இதயம் மற்றும் அதிலிருந்து பீறிட்டு வழியும் இரத்தம் ஒரு கிண்ணத்தில் ஊற்றுகிறதுஇது மீண்டும் இயேசுவின் திருப்பாடுகள்இயேசுவின் தூய்மைமிகு இருதயம் மற்றும் தூய்மைமிகு நற்கருணை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தெளிவான தொடர்பை வெளிப்படுத்துகிறது.

பிற்காலத்தில் இயேசு தனது இருதயத்தை இவ்வுலகிற்கு வழங்குகிறார் என்கிற கருத்தின் அடிப்படையில்இயேசுவின் தூய்மைமிகு இருதயம் இயேசுவின் கைகளில் இருப்பதுபோன்று சித்தரிக்கப்பட்டதுஇது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் வழக்கத்தில் இல்லைஇப்போது இதுவே உலகில் இயேசுவின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாகும்.

இருப்பினும் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தையும் கிறிஸ்துவின் பாடுகளினால் ஏற்பட்ட திருக்காயங்களையும் ஒன்றோடொன்று இணைத்தே நினைவில் கொள்வது மிகவே முக்கியம்ஏனெனில் இயேசுவின் அவலகரமான துன்பம் மனிதகுலத்தின் மீதான அவரது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

உதவி:



Sunday, 31 May 2020

அன்னையை அறிவோம் - 31


 அன்னையை அறிவோம் - 31
  
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)



1.‘பழைய பாம்பு தன் சாவுக்குரிய நஞ்சை ஏவாள் வழியாக மனிதருக்குள் புகுத்தியதுமீட்பு தரும் மாற்று மருந்தை மனிதருக்கு தயாரித்துத் தந்தார் மரியா’. – புனித பெர்னாந்து.

2.‘ஏவாளைத் தொடர்ந்து இருளும் இடர்பாடுகளும்மருளும் மரணமும் வந்தனமரியாவைத் தொடர்ந்து அருளும் ஒளியும்அன்பும் வாழ்வும் வந்தன’. – புனித புருனோ

3. ‘ஏவாள் அலகையினால் ஆட்கொள்ளப்பட்டாள்மரியா அலகையையே ஆட்டிப்படைத்தார்’. – புனித புருனோ

4.  ‘அன்னை மரியாவை அதிகமாய் அன்பு செய்ய அச்சப்பட வேண்டாம்இயேசுவைவிட அதிகமாய் நீங்கள் அன்பு செய்துவிட முடியாது’. – புனித மேக்சி மில்லியன் கோல்பே

5. ‘அன்னைக்கு ஊழியம் செய்யாமல் ஒருவரும் அவர் மகனின் ஊழியர்களாக முடியாது’. – ஆயர் ஹில்டப்போன்ஸ்

6. ‘மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக்காரணமானார்’. – புனித இரேனேயுஸ்

7.‘செபமாலையை தக்க விதமாக செபிக்கிறவன் ஒருபோதும் சேதம் ஆக மாட்டான்இதை நான் என் இரத்தத்தில் எழுதித்தர தயாராக இருக்கிறேன்’. - புனித லூயி மான்போர்ட்

8. ‘அன்னையின் காட்சிகள் வழியாக இயேசு உலகில் தம் அன்னைக்குரிய இடத்தை வெளிப்படுத்துகிறார்’. – ரெனே லொராந்தன்

9. ‘கிறிஸ்து இன்றும் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய தாய் அறியப்படாமல் இருப்பதே’. – கர்தினால் புனித ஹென்றி நியூமன்

10. ‘கன்னி மரியாவின் உதவி இல்லாமல் அருளை விரும்புவது இறக்கைகள் இல்லாமல் பறப்பதற்கு ஆசைப்படுவதாகும்’. – திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்


Saturday, 30 May 2020

அன்னையை அறிவோம் - 30


 அன்னையை அறிவோம் - 30
  
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)




1.'என்னிடம் செபமாலையைச் செபிக்கும் ஒரு படையிருந்தால் அதைக்கொண்டு உலகத்தையே மனந்திருப்பி விடுவேன்’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்

2. ‘அன்னையை அழைத்தால் அதன் எதிரொலி இயேசு என்று ஒலிக்கும்’ - புனித லூயி மான்போர்ட்.

3.  ‘செபமாலை கிறித்தவ மக்களை உயர்த்தும்’ - திருத்தந்தை 3 ஆம் உர்பன்.

4. ‘மரியாவின் நாமம் தேனை விட நாவுக்கு இனிமையானதுபரவசப்படுத்தும் பாட்டை விட செவிக்கு இனிமை தருவது’ - புனித அந்தோனியார்.

5. ‘மரியா இயேசுவை தனது உதிரத்தில் தாங்கும் முன்பே உள்ளத்தில் தாங்கினார்’ - புனித அகுஸ்தினார்.

6. ‘செபமாலையை நீ நன்றாக சொன்னால் செபங்களில் அதுவே சிறந்த செபமாகும்’ - புனித பிரான்சிஸ்கு சலேசியார்.

7.  ‘என் உடல் முழுவதும் நாவாக மாறினாலும் அன்னையின் புகழைப் பாடித் தீர்க்க முடியாது’. - புனித பொன்வாய் அருளப்பர்.

8. ‘கிறிஸ்துவை அறிய வேண்டுமாஅன்னை மரியாவிடம் செல்லுங்கள்’. - திருத்தந்தை ஆறாம் பவுல்.

9. ‘ஏவாள் நமக்கு சாவைக் கொண்டு வந்தார்மரியாவோ நமக்கு வாழ்வைக் கொண்டு வந்தார்’. – புனித எப்ரேம்

10.‘ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டதுநம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியா அவிழ்த்துவிட்டாள்’. – புனித இரேனியுஸ்