அன்னையை அறிவோம் - 10
1. மரியாவின் புனித ஆண்டு திரு அவையில் எந்த வருடம் கொண்டாடப்பட்டது? 1987.
2. ‘மரியாவின் இரகசியம்’ என்னும் புத்தகத்தை எழுதியது யார்? புனித லூயிஸ் டி மான்போர்ட்.
3. ‘மரியாவின் புகழ்பாடும் திரு அவையின் தந்தையர்’ என்று அழைக்கப்படும் இருவரின் பெயரைக் குறிப்பிடுக? புனித எப்ரேம், புனித அம்புரோஸ்.
4. ‘புதிய ஏவாள்’ என்று அழைக்கப்படுபவர் யார்? புனித மரியா.
5. மரியன்னையின் தூய இருதயத்திற்கு இவ்வுலகம் எப்போது யாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது? 1942 அக்டோபர் 31 ஆம் நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
6. மரியாவின் திருத்தந்தை என அழைக்கப்படுபவர் யார்? திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.
7. மரியன்னையின் மறைவல்லுநர்கள் சிலரை கூறு? புனித பெர்னாந்து, புனித லிகோரி, புனித பீட்டர் தமியான், புனித பொனவெஞ்சர்.
8. மரியா யாரால் விண்ணக மண்ணக அரசியாக திரு அவையில் பிரகடனப்படுத்தப்பட்டாள்? திருத்தந்தை 12 ஆம் பத்திநாதரால்.
9. ‘மரியாவின் அரச மகத்துவம்’ என்கிற திருமடலை எழுதிய திருத்தந்தை யார்? திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.
10. ‘மரியாவின் பண்பாடு’ என்னும் சுற்றுமடல் யாரால் எப்போது வெளியிடப்பட்டது? திருத்தந்தை ஆறாம் பவுலால் 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பட்ட திருவிழாவின்போது.