Saturday, 9 May 2020

அன்னையை அறிவோம் - 9


அன்னையை அறிவோம் - 9



1. கத்தோலிக்க கிறித்தவர்கள் மரியன்னைக்கு செலுத்துவது ஆராதனையாஒருபோதும் இல்லை. மரியன்னைக்கு செலுத்தப்படுவது மேலான வணக்கம்.

2. ‘மரியா அமல உற்பவம்என்பதன் பொருள் என்னதாயின் கருவில் உருவாகும் போது பிறப்புநிலைப் பாவம் (ஜென்மப் பாவம்) இல்லாமல் உற்பவித்தவர்.

3. ‘மரியாவின் மகிமைகள்என்ற நூலை எழுதியது யார்புனித அல்போன்ஸ் மரிய லிகோரி.

4. ‘மரியா இறைவனின் தாய்என்கிற நம்பிக்கைக் கோட்பாடு எப்போது, எந்த திருச்சங்கத்தில் வெளியிடப்பட்டதுகி.பி. 431 ஆம் ஆண்டு, எபேசு என்ற இடத்தில் நடந்த திருச்சங்கத்தில்.

5. மரியாவைதிரு அவையின் தாயாகஅறிவித்த திருத்தந்தை யார்திருத்தந்தை 6 ஆம் பவுல்.

6. மரியாவின் விண்ணேற்பு யாரால், எப்பொழுது பிரகடனம் செய்யப்பட்டதுதிருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் (பயஸ்), 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி.

7. மரியாவின் சிறப்பு வரலாற்றை தொகுத்து அளித்தவர் யார்புனித பெர்னார்ந்து.

8. மரியாவின் புனித ஆண்டில் திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல், மரியாவைப் பற்றி வெளியிட்ட அறிக்கையின் பெயர் என்னமீட்பரின் தாய்.

9. மரியாவைப்பற்றி திரு அவை அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிட்டிருக்கிற நான்கு நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவை?
Ø மரியா இறைவனின் தாய் (கி.பி. 431)
Ø மரியா என்றும் கன்னி (கி.பி. 649)
Ø மரியாவின் அமல உற்பவம் (கி.பி. 1854)
Ø மரியாவின் விண்ணேற்பு (கி.பி. 1950)

10. ‘மரியா விண்ணக மண்ணக அரசிஎன்ற அறிவிப்பு திரு அவை முழுவதும் எப்போது அறிவிக்கப்பட்டது1954.