அன்னையை அறிவோம் - 8
1. டிசம்பர் 8 ஆம் தேதி மரியன்னைக்கு கொண்டாடப்படும் திருவிழா யாது? மரியாவின் அமல உற்பவத் திருவிழா.
2. மரியாவின் மாசற்ற இருதய விழா என்று கொண்டாடப்படுகிறது? பெந்தகோஸ்தே பெருவிழாவிற்கு பின் மூன்றாம் சனிக்கிழமை
3. புனித செபமாலை அன்னையின் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது? அக்டோபர் மாதம் 7 ஆம் நாள்.
4. மரியன்னையின் திருவிழாக்களுள் இந்தியாவில் கடன் திருவிழாவாக கொண்டாடப்படும் திருவிழா எது? மரியன்னையின் விண்ணேற்பு - ஆகஸ்ட் 15.
5. கன்னி மரியாவின் ஆலய நேர்ந்தளிப்பு விழா (புனித பனிமய அன்னை திருவிழா) எப்போது கொண்டாடப்படுகிறது? ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள்.
6. புனித பாத்திமா அன்னையின் திருவிழா கொண்டாடப்படும் நாள் எது? மே மாதம் 13 ஆம் நாள்.
7. கன்னி மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நினைவை எப்போது கொண்டாடுகிறோம்? நவம்பர் மாதம் 21 ஆம் நாள்.
8. புனித சலேத் அன்னையின் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது? செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள்.
9. இடைவிடா சகாய அன்னையின் திருவிழாவை எப்போது கொண்டாடுகிறோம்? ஜீன் மாதம் 27 ஆம் நாள்.
10. நல்ல ஆலோசனை அன்னையின் திருவிழாவானது எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள்.