அன்னையை அறிவோம் - 7
1. ஜனவரி முதல் நாள் மரியாவுக்கு எந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்? புனித மரியா இறைவனின் தாய் திருவிழா.
2. பிப்ரவரி 11 ஆம் நாள் கொண்டாடப்படும் மரின்னையின் திருவிழா யாது? புனித லூர்து அன்னை திருவிழா.
3. கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவுக்கு மங்கள வார்த்தை கூறிய திருநாளை எப்போது நினைவு கூறுகிறோம்? மார்ச் 25 ஆம் நாள்.
4. மே 24 ஆம் தேதி கொண்டாடப்படும் அன்னையின் திருவிழா யாது? கிறிஸ்தவர்களின் சகாய அன்னை திருவிழா.
5. கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த நினைவை எப்போது கொண்டாடுகிறோம்? மே 31 ஆம் நாள்.
6. ஜுலை 16 ஆம் நாள் கொண்டாடப்படும் அன்னையின் விழா யாது? புனித கார்மேல் அன்னையின் விழா.
7. மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திருவிழா நாள் எது? ஆகஸ்டு 15 ஆம் நாள்.
8. மரியா விண்ணக அரசியாக முடி சூட்டப்பட்ட திருவிழாவை என்று நினைவு கூறுகிறோம்? ஆகஸ்டு 22 ஆம் நாள்.
9. மரியாவின் பிறந்த நாளை என்று கொண்டாடுகிறோம்? செப்டம்பர் 8 ஆம் நாள்.
10. செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் கொண்டாடப்படும் திருவிழா யாது? புனித வியாகுல அன்னை திருவிழா.