Friday, 29 May 2020

அன்னையை அறிவோம் - 29


அன்னையை அறிவோம் - 29

(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)

  

1. ‘மரியாவின் பிள்ளை அவலமாய் சாகாது’. - புனித தொன் போஸ்கோ.

2.‘மாலுமிகள் விடிவெள்ளியின் பிரகாசத்தால் துறைமுகத்துக்கு வழிநடத்தப்படுவதைப் போல்கிறிஸ்தவர்கள் மரியாவால் மோட்சத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள்’. - புனித தாமஸ் அக்குவினாஸ் 

3. ‘நான் திரு அவையில் இல்லாவிட்டாலும் எனக்கு கவலையில்லைதேவ அன்னையை வணங்க மட்டும் என்னை அனுமதித்தால் போதும்’ -  ஜெஸ்டர்டன்.

4. ‘நற்செய்தியின் சுருக்கம் செபமாலை’ - திருத்தந்தை 6 ஆம் பத்திநாதர்.

5. ‘செபமாலையை விட பெரிய புதையல் எதுவும் இல்லை’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்.

6.‘செபமாலை என் விருப்பத்துக்குரிய செபம்அது அற்புதமான செபம்ஏனென்றால் அது எளிமையையும்ஆழத்தையும் கொண்டது’. திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 

7. 'அன்னையைப் பின்பற்றுவோர் வழி தவறியதில்லைஅவள் உதவியை நாடுவோர்அவளைப்பற்றி சிந்திப்பவர்கள் தவறான பாதையில் செல்வதில்லை’ - புனித பெர்னார்டு.

8. ‘இறைவனுடைய இரக்கம் புதையலாக அவள் கைகளில் உள்ளது’- புனித பீட்டர் தமியன்.

9. ‘மரியன்னையை உன் உள்ளத்தில் வைத்தால் இயேசு உன் உள்ளத்தில் வளருவார்’ - பேராயர் புல்டன் ஷீன்.

10.‘தன் மகனுக்கு மேல் தன்னைப் புகழ்வதை அன்னை ஒருபோதும் விரும்புவதில்லை’ - திருத்தந்தை 23 ஆம் யோவான் பவுல்.


Thursday, 28 May 2020

அன்னையை அறிவோம் - 28


அன்னையை அறிவோம் - 28





1. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்கன்னியே என்கிற புகழுரைகள்மொத்தம் எத்தனை6.

2. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் கன்னியே என்கிற புகழுரைகளைக் கூறு

  •  பேரறிவுமிகு கன்னியே
  •  வணக்கத்திற்குரிய கன்னியே
  •  போற்றுதற்குரிய கன்னியே 
  •  வல்லமையுள்ள கன்னியே
  •  பரிவுள்ள கன்னியே
  •  நம்பிக்கைக்குரிய கன்னியே


3. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் மரியாவின் பண்புகளைச் சாற்றும் புகழுரைகள் மொத்தம் எத்தனை6.

4. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் மரியாவின் பண்புகளைச் சாற்றும் புகழுரைகளைக் கூறு?

  •  நீதியின் கண்ணாடியே
  •  ஞானத்திற்கு உறைவிடமே
  •  எங்கள் மகிழ்ச்சியின் காரணமே
  •  ஞானம் நிறைந்த பாத்திரமே
  •  மாட்சிக்குரிய பாத்திரமே
  •  பக்தி நிறை பாத்திரமே


5. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்பழைய ஏற்பாட்டு உருவகப் புகழுரைகள்மொத்தம் எத்தனை7.

6. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் பழைய ஏற்பாட்டு உருவகப் புகழுரைகளைக் கூறு?

  •  மறைபொருளின் ரோசா மலரே
  •  தாவீது அரசரின் கோபுரமே
  •  தந்த மயமான கோபுரமே
  •  பொன் மயமான ஆலயமே
  •  உடன்படிக்கையின் பேழையே
  •  விண்ணகத்தின் வாயிலே
  •  விடியற்காலை விண்மீனே


7. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்மக்கள் தொடர்புடைய புகழுரைகள்மொத்தம் எத்தனை? அவை யாவை? 

மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘மக்கள் தொடர்புடைய புகழுரைகள்’ மொத்தம் 5.

  •  நோயுற்றோரின் ஆரோக்கியமே
  •  பாவிகளுக்கு அடைக்கலமே
  •  துயருறுவோருக்குத் ஆறுதலே
  •  கிறிஸ்தவர்களுடைய துணையே (சகாயமே)
  •  புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே


8. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்அரசியே என்கிற புகழுரைகள்மொத்தம் எத்தனை13.

9. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் அரசியே என்கிற புகழுரைகளைக் கூறு?

  •  வானதூதர்களின் அரசியே 
  •  முதுபெரும் தந்தையரின் அரசியே 
  •  இறைவாக்கினர்களின் அரசியே 
  •  திருத்தூதர்களின் அரசியே 
  •  மறைசாட்சிகளின் அரசியே 
  •  இறையடியார்களின் அரசியே 
  •  கன்னியரின் அரசியே
  •  அனைத்துப் புனிதர்களின் அரசியே 
  •  அமல உற்பவியான அரசியே 
  •  விண்ணேற்பு பெற்ற அரசியே 
  •  திருச் செபமாலையின் அரசியே
  •  குடும்பங்களின் அரசியே 
  •  அமைதியின் அரசியே

10. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் 2020 ஜுன் 20 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்த புதிய புகழுரைகள் யாவை?

- இரக்கத்தின் அன்னையே
- எதிர்நோக்கின் அன்னையே 
- புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே 


Wednesday, 27 May 2020

அன்னையை அறிவோம் - 27



அன்னையை அறிவோம் - 27





1. நாம் தற்போது பயன்படுத்தும் மரியின் மன்றாட்டுமாலையின் உண்மையான பெயர் என்னலொரேட்டோ மன்றாட்டுமாலை

2. லொரேட்டோ மன்றாட்டுமாலை யாரால் எப்போது திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டதுதிருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் - 1587.

3. லொரேட்டோ மன்றாட்டுமாலையில் அங்கீகரிக்கப்பட்ட மரியின் புகழுரைகள் மொத்தம் எத்தனை49 (பழையது) அல்லது 54 (புதியது).

4. ‘அமைதியின் அரசியேஎன்கிற புகழுரை அன்னைக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டதுதிருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் - 1917. 

5. ‘திரு அவையின் அன்னையேஎன்கிற புகழுரை அன்னைக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டதுதிருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் - 1980. 

6.  ‘குடும்பங்களின் அரசியேஎன்கிற புகழுரை அன்னைக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டதுதிருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் - 1995. 

7. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்புனித என்கிற புகழுரைகள்மொத்தம் எத்தனை3. 

8. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் புனித என்கிற புகழுரைகளைக் கூறு?  
  •  புனித மரியே
  •  இறைவனின் புனித அன்னையே
  •  கன்னியருள் புனித கன்னியே
9. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்அன்னையே என்கிற புகழுரைகள்மொத்தம் எத்தனை14. 

10. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் அன்னையே என்கிற புகழுரைகளைக் கூறு?  
  •  கிறிஸ்துவின் அன்னையே
  •  இறையருளின் அன்னையே
  •  தூய்மைமிகு அன்னையே
  •  கன்னிமை குன்றா அன்னையே
  •  மாசு இல்லாத அன்னையே
  •  பாவக் கறையில்லா அன்னையே
  •  அன்புக்குரிய அன்னையே
  •  வியப்புக்குரிய அன்னையே
  •  நல்ல ஆலோசனை அன்னையே
  •  படைத்தவரின் அன்னையே
  •  மீட்பரின் அன்னையே
  •  திரு அவையின் அன்னையே
  • இரக்கத்தின் அன்னையே
  • எதிர்நோக்கின் அன்னையே