அன்னையை அறிவோம் - 31
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)
1.‘பழைய பாம்பு தன் சாவுக்குரிய நஞ்சை ஏவாள் வழியாக மனிதருக்குள் புகுத்தியது. மீட்பு தரும் மாற்று மருந்தை மனிதருக்கு தயாரித்துத் தந்தார் மரியா’. – புனித பெர்னாந்து.
2.‘ஏவாளைத் தொடர்ந்து இருளும் இடர்பாடுகளும், மருளும் மரணமும் வந்தன. மரியாவைத் தொடர்ந்து அருளும் ஒளியும், அன்பும் வாழ்வும் வந்தன’. – புனித புருனோ
3. ‘ஏவாள் அலகையினால் ஆட்கொள்ளப்பட்டாள். மரியா அலகையையே ஆட்டிப்படைத்தார்’. – புனித புருனோ
4. ‘அன்னை மரியாவை அதிகமாய் அன்பு செய்ய அச்சப்பட வேண்டாம். இயேசுவைவிட அதிகமாய் நீங்கள் அன்பு செய்துவிட முடியாது’. – புனித மேக்சி மில்லியன் கோல்பே
5. ‘அன்னைக்கு ஊழியம் செய்யாமல் ஒருவரும் அவர் மகனின் ஊழியர்களாக முடியாது’. – ஆயர் ஹில்டப்போன்ஸ்
6. ‘மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக்காரணமானார்’. – புனித இரேனேயுஸ்
7.‘செபமாலையை தக்க விதமாக செபிக்கிறவன் ஒருபோதும் சேதம் ஆக மாட்டான். இதை நான் என் இரத்தத்தில் எழுதித்தர தயாராக இருக்கிறேன்’. - புனித லூயி மான்போர்ட்
8. ‘அன்னையின் காட்சிகள் வழியாக இயேசு உலகில் தம் அன்னைக்குரிய இடத்தை வெளிப்படுத்துகிறார்’. – ரெனே லொராந்தன்
9. ‘கிறிஸ்து இன்றும் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய தாய் அறியப்படாமல் இருப்பதே’. – கர்தினால் புனித ஹென்றி நியூமன்
10. ‘கன்னி மரியாவின் உதவி இல்லாமல் அருளை விரும்புவது இறக்கைகள் இல்லாமல் பறப்பதற்கு ஆசைப்படுவதாகும்’. – திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்